சாதனை படைத்த மாஸ்டர் : 3-ம் நாள் வசூல் என்ன தெரியுமா?

Master Collection Record : பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்விட் செய்துள்ளது.

Master Collection Record : பொங்கல் பண்டிகை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில், கடந்த 13-ந்தேதி வெளியான படம் மாஸ்டர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள இந்த படத்தில் மாளவிக மேகனன் நாயகியாக நடித்தள்ளார். மேலும் சாந்தனு, அர்ஜூன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அதிக ஸ்கிரீன்களில் வெளியான இந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் ஹிட் படமான இந்த படம் தமிழகத்தில் முதல் நாள்ல் ரூ .26 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்து சமீபத்தில் வெளியான அறிக்கையில், விஜய் படம் 3 நாட்களில் தமிழகத்தில் ரூ .50 கோடியை எட்டியுள்ளது. மேலும் அனைத்து ஏரியாக்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகயில், ‘மாஸ்டர்’ திரைப்படம் மாநிலம் முழுவதும் 5 ஆம் நாள் ரூ .100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அனைத்து ஏரியாக்களிலும் சாதனை படைத்துள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் விநியோகஸ்தர்கள் உற்சாகமாக உள்ளனர்.  மேலும் ‘மாஸ்டர்’ இன்னும் ஒரு வாரத்தில் லாபத்தை எட்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாஸ்டர்’ விஜய் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத பொங்கலாக மாறியுள்ளது, அதிக வசூல் செய்த விஜய் படங்களில் வரிசையில் மாஸ்டர் படம் இணைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில், விஜய் பேராசிரியராகவும், விஜய் சேதுபதி தனது சக்திவாய்ந்த வில்லன் கதாப்பத்திரத்திலும் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pongal release master movie collection record on tamilnadu

Next Story
டாட்டூவை மாற்றிய வனிதா: உறவுகள் வலுப்பட வேண்டுமாம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com