வருடா வருடம் மாதந்தோறும் பண்டிகை என்ற பெயரில் நிறைய விசேஷங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஆயினும் இவற்றில் எல்லாம் முதன்மை பெறும் ஒரு சிறப்பு மிக்க மகிழ்ச்சியான பண்டிகை, உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை தான்.
உழவர் திருநாளாம் தைத்திருநாள், உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களாலும் கொண்டாடப்பட்டுகிறது.பொங்கல் விழா, மக்களால் இயற்கை முறையில் இயல்பாகக் கொண்டாடப்படும் ஒரு உண்மையான விழா; உழைக்கும் தமிழ் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.
நாடு முழுவதும் உள்ள தமிழகர்கள் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலாகலமாக கொண்டாடத்தை துவங்கி உள்ளனர். பொது மக்களை போன்றே சினிமா பிரபலங்களும் தங்களது குடும்பத்துடன் போன்றே பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
அதே போல தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு நடிகர்களும், சின்ன திரை பிரபலங்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இதோ.