மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கோரிய 'பொன்மகள் வந்தாள்' இயக்குநர்: சர்ச்சைக் காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு

பொன்மகள் வந்தாள் படத்தில் அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்து, தவறான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

பொன்மகள் வந்தாள் படத்தில் அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்து, தவறான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ponmagal vandhal, suriya, jyotika, ponmagal vandhal preview, ponmagal vandhal amazon prime, surya, jyothika, பொன்மகள் வந்தாள், சூர்யா, அமேசான், ஜோதிகா

அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள முதல் படமாக அமைந்துள்ளது. புதுமையான முறையில் அதிகாரப்பூர்வமாக ஆன்லைனில் வெளியான இப்படத்துக்கு ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது.

Advertisment

ரூ3 லட்சம் வரை உதவி… 4 சதவிகிதம் வட்டியில்! மத்திய அரசு கிசான் அட்டை இன்னும் நீங்கள் பெறவில்லையா?

’பொன்மகள் வந்தாள்' படம் குறித்த விமர்சனங்களில் ஜோதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதற்கிடையே இந்தப் படத்தில் அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்து, தவறான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பலரும் இயக்குநர் ஃப்ரெட்ரிக்கிடம் விளக்கம் கோரினார்கள்.

Advertisment
Advertisements

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரெட்ரிக் வெளியிட்டுள்ள கடிதத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார். அந்தக் கடிதத்தில்,

தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு – ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம்

"AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம். இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Jyothika

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: