பொன்மகள் வந்தாள் - வெண்பாவின் நீதியை நோக்கிய பயணம் : டுவிட்டராட்டிகளின் ரியாக்சன்
Ponmagal vandhal trailer : பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
Ponmagal vandhal trailer : பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
ஜோதிகா வழக்கறிஞராக நடித்திருக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம், வரும் 29ம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisment
சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன்மகள் வந்தாள். ஜேஜே ப்ரெட்ரிக் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் ஆர்.பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப்போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் அமேசான் பிரைமில் நேரடியாக படத்தை வெளியிட சூர்யா முடிவெடுத்தார். ஆனால் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமேசானில் பிரைமில் படம் வெளியானால் சூர்யா, ஜோதிகா நடிக்கும் படங்களை திரையிடமாட்டோம் என்ற அளவுக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பையும் மீறி நடிகர் சூர்யா படத்தை அமேசான் பிரைமில் வெளியிட துணிச்சலான முடிவை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மே 29-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
Advertisment
Advertisements
டுவிட்டரில் ஜோதிகா என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகியுள்ள நிலையில், டுவிட்டராட்டிகளின் கமெண்ட்களை இங்கு பார்ப்போம்