ponmagal vanthal TamilRockers, ponmagal vanthal Full Movie Download, ponmagal vanthal Full Movie Download Online, பொன்மகள் வந்தாள், பொன்மகள் வந்தாள் தமிழ் மூவி, தமிழ் ராக்கர்ஸ்
Ponmagal Vanthal In TamilRockers: பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி தளத்தில் ரீலீஸான முதல் நாளே தமிழ்ராக்கர்ஸ் திருட்டுத்தனமாக இணையதளத்தில் ரிலீஸ் செய்திருக்கிறது. அதுவும் அமேஸான் பிரைமில் வெளியானது போலவே ஹெச்.டி தரத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது. எனினும் தமிழ் ராக்கர்ஸ் இப்படி படங்களை திருடுவது வாடிக்கைதான். இதுவரை இதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
Advertisment
ஜோதிகா நடிப்பில், அவரது கணவர் சூர்யாவின் தயாரிப்பில் இன்று (மே 29) வெளியான படம் பொன்மகள் வந்தாள். நேரடியாக ஓடிடி தளத்தில் (அமேஸான் பிரைம்) வெளியான முதல் படம் என்கிற பெருமை இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது. திரைத்துறையினரின் ஒரு தரப்பு எதிர்ப்பையும் மீறி, ஓடிடி தளத்தில் நடிகர் சூர்யா இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறார்.
முக்கியப் பிரமுகர்களுக்கு இந்தப் படத்தின் பிரிமியர் ஷோ நேற்று காண்பிக்கப்பட்டது. படத்தைப் பற்றி பலரும் பாசிட்டிவாக ரிவ்வியூ கொடுத்தனர். நடிகர் சூர்யா, ஒரு தயாரிப்பாளராகவும் பார்வையாளராகவும் தனக்கு படம் திருப்தி தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதற்கிடையே அமேஸான் பிரைமில் படம் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் அதே ஹெ.டி தரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறது. இதனால் படத் தயாரிப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அமேஸான் பிரைம் நிறுவனம் இது தொடர்பாக தமிழ் ராக்கர்ஸ் மீது சட்ட நடவடிக்கை தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
எனினும் தமிழ் ராக்கர்ஸ் இப்படி படங்களை திருடுவது வாடிக்கைதான். இதுவரை இதை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவ்வப்போது இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு இதேபோல புதுப்படங்களை ரிலீஸ் அன்றே இணையதளத்தில் வெளியிடுகிறது தமிழ் ராக்கர்ஸ்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"