என் நிலைமை எதிரிக்கும் வர கூடாது; எனக்காக கோடி கணக்கில் செலவு செய்த நடிகர் என் கடவுள்: பொன்னம்பலம் உருக்கம்!
நடிகர்கள் சரத்குமார் முதல் சிரஞ்சீவி வரை யாரெல்லாம் தனக்கு உதவி செய்தார்கள் என நடிகர் பொன்னம்பலம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர்கள் சரத்குமார் முதல் சிரஞ்சீவி வரை யாரெல்லாம் தனக்கு உதவி செய்தார்கள் என நடிகர் பொன்னம்பலம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் பொன்னம்பலம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது குறித்து ஊடகங்களில் பல செய்திகள் வெளியான நிலையில், தனக்கு உதவி செய்தவர்கள் குறித்து மனம் திறந்து அவர் தெரிவித்துள்ளார். கலாட்டா தமிழ் யூடியூப் சேனல் உடனான நேர்காணலின் போது, பல்வேறு விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அதில், "ஸ்டண்ட் கலைஞராக மட்டுமல்லாமல், மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞராகவும் நான் இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னை சிலர் ஏமாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக, சிலரை நம்பி பணத்தை இழந்திருக்கிறேன். ஆனால், அவற்றை கடந்து வந்துவிட்டேன்.
என் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது சரத்குமார், தனுஷ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் எவ்வளவு உதவி செய்தார்கள் என்று நான் சொல்லிக் காட்ட விரும்பவில்லை. ஏனெனில், என் மனநிறைவை விட அதிகமாக உதவி செய்தனர்.
உணவு சாப்பிடுவதற்கு கூட சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இந்த நிலையை அனுபவித்துக் கூறிகிறேன். டையலைசிஸ் செய்யும் நிலமை, என்னுடைய எதிரிக்கு கூட வரக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இதனை உலகத்திலேயே மிகப்பெரிய தண்டனையாக நான் கருதுகிறேன்.
Advertisment
Advertisements
தற்போது மட்டும் சுமார் ரூ. 35 லட்சத்திற்கும் மேல் சிகிச்சைக்காக செலவானது. எனக்கு கடவுள் மாதிரி இருந்து உதவி செய்தது சிரஞ்சீவி சார் தான். என்னுடைய சிகிச்சைக்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்தார். ஏறத்தாழ ரூ. 1 கோடியே 15 லட்சம் வரை அவர் செலவு செய்திருக்கக் கூடும்.
இதன் மூலம் என் மீது யார் அக்கறையாக இருக்கிறார்கள் என்று தெரிந்து விடும். நடிகர் அர்ஜூன் வீட்டில் ஒருவர் மறைந்த சூழலில் கூட, அந்த நேரத்தில் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தார். மேலும், தனுஷ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்த போதும் கூட, எனக்காக அவர் பல உதவிகளை செய்தார். இவற்றை ஒரு நாளும் நான் மறக்க மாட்டேன்.
என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசிய சிரஞ்சீவி, மிகுந்த நம்பிக்கை அளித்தார். மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை அவரே பார்த்துக் கொள்வதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
என் மீது அதிக பாசம் வைத்திருப்பவர்களாக சிலரை நான் கூறுவேன். சரத்குமார், கே.எஸ். ரவிக்குமார், தனுஷ், சிரஞ்சீவி ஆகியோரை அந்த வரிசையில் கூறிவேன். கோயிலுக்கு சென்ற போது, சிரஞ்சீவி பவா என்று கூறி குருக்கள் அர்ச்சனை செய்தார். அப்போது தான், சிரஞ்சீவியிடம் உதவி கேட்கலாம் என்று யோசனை வந்தது. அதன் பின்னர், அவருக்கு போன் செய்து உதவி கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விட எனக்கு அதிகப்படியான உதவி செய்தார்" என நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.