பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் முழு காட்சிகளும் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது படக் குழுவினருக்கு கூடுதல் அதிரிச்சி அளித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் இன்று காலை 9 மணிக்கு, பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் வெளியானது. படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அனைவரும் எதிர்பார்த்த அக -நக பாடல் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அந்த பாடலில் குந்தவை – வந்தியத் தேவன் இடம் பெறும் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது. படத்தில் பல இடங்களில் ரசிகர்கள் கண்ணீர் சிந்தி உணர்ச்சிவசப்பட்டனர். மேலும் குறிப்பாக இறுதி காட்சிகளுக்கு முன்பாக உள்ள நந்தினி- ஆதித்த கரிகாலன் இடம் பெறும் காட்சிகள் ரசிகர்களை மேலும் வியக்கவைத்துள்ளது. மேலும் படம் பார்த்த அனைவருமே, படத்தின் ஒட்டுமொத்த குழுவை பாராட்டியுள்ளனர். மேலும் இயக்குநர் மணிரத்னம் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளதாக சமூகவலைதளத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் படம் வெளியான 2 மணி நேரத்தில் ஒட்டுமொத்த படமும் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. சமூகவலைதளத்தில் ஒட்டிமொத்த படத்தின் காட்சிகளும் வெளியாகி உள்ளது. இந்த படம் முழுவதையும் பார்க்கும் லிங்குகள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவல் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் இதுபோன்று படத்தை வெளியிட்ட இணையதள முகவரிகள், ஆன்லைன் லிங்குகளை கவனித்திற்கு கொண்டு வர, ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் பொன்னியின் செல்வன் 2 படக்குழு கோரிக்கை வைத்துள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பை பட குழு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil