இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பார்ட் 2 திரைப்படம் இன்று வெளியாகிறது.
முக்கியமான படங்களுக்கு சிறப்பு காட்சிகள் எப்போதும் வெளியாகும். ஆனால் இந்த முறை பொன்னியின் செல்வன் பார்ட் 2-வுக்கு சிறப்பு காட்சிகள் இல்லை. காலை 9 மணிக்கு படம் வெளியாகும்.
இந்நிலையில் படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பிரபு, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் பார்ட்- 1 திரையரங்கில் வெளியானது. கிட்டதட்ட 1 மாதம் முழுவதும் எல்லா திரையரங்கும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. எதிர்பார்த்ததைவிட இந்த படத்தின் வசூல் ரூ. 500 கோடியை குவித்தது. இந்நிலையில் 2-ம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இது மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil