scorecardresearch

நந்தினி – கரிகாலன் காதல் மெலடி : பி.எஸ் 2 சின்னஞ்சிறு நிலவே பாடல் வெளியீடு

பொன்னியின் செல்வன் 2 படத்தின் சின்னஞ்சிறு நிலவே பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

Nanthini Karikalan
நந்தினி – கரிகாலன் – பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகத்தில் சின்னஞ்சிறு நிலவே பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். 2 பாகங்களாக தயாரான இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், 2-ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ந் தேதி வெளியாக உள்ளது. இரு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனிடையே பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழு ப்ரமோஷனை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே அவ்வப்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திற்கான அப்டேட்கள் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஹரிசரண் இசையமைத்து, இளங்கோ கிருஷ்ணன் எழுதிய “சின்னஞ்சிறு நிலவே” பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நந்தினி (ஐஸ்வர்யா ராய்) ஆதித்த கரிகாலக் (விக்ரம்) இருவருக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்துவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய் பச்சனின் நந்தினி மற்றும் விக்ரமின் ஆதித்ய கரிகாலன் சிறுவயது காதலிகளாக நடித்துள்ளனர், அவர்கள் பிரிந்து இப்போது இருவருக்கும் இடையே கசப்பு ஏற்படுகிறது. “சின்னஞ்சிறு நிலவே” இரண்டு முன்னாள் காதலர்களின் இதயத்தில் தங்கியிருக்கும் காதலையும் வலியையும் பேசுகிறது. இந்த பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பாடல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் பொன்னியின் செல்வன் கீதத்தை வெளியிட்டார். இந்தப் பாடல் சோழப் பேரரசின் பெருமையைப் பற்றிப் பேசுகிறது. மியூசிக் வீடியோவில் ரஹ்மான் சிம்மாசனத்திற்கு அருகில் பாடலைப் பாடுகிறார். இதில் படத்தின் காட்சிகளும் அடங்கும். ஐஸ்வர்யா மற்றும் விக்ரம் தவிர, பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா கிருஷ்ணன், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ponniyin selvan 2 song chinnanjiru nilave is a melancholic melody