scorecardresearch

பூங்குழலி… பொன்னியின் செல்வன் காதலி… ஐஸ்வர்யா லட்சுமி நியூ க்ளிக்ஸ்

பொன்னியின் செல்வன் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Aishwarya
பொன்னியின் செல்வன் பூங்குழலி

மருத்துவம் படித்துவிட்டு சினிமாவில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாளத்தில் அறிமுகமான இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.

Aishwarya Lakshmi
ஐஸ்வர்யா லட்சுமி

தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்த இவர், புத்தம்புது காலை விடியாதா என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

ஐஸ்வர்யா லட்சுமி

மேலும் சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவாகவும் இருந்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி

அதன்பிறகு ஆர்யா நடிப்பில் கேப்டன் என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி,வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டும் பெண் பூங்குழலி கேரக்டரில் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா லட்சுமி

இந்த படத்தில் பொன்னியின் செல்வன் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்று வருகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி

தற்போது தமிழ் தெலுங்கு மலையாள படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ponniyin selvan actress aishwarya lakshmi photo gallery update

Best of Express