தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா தற்போது தனது ட்விட்டர் பககத்தில் வெளியிட்டுள்ள சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தை பூர்வீகமான கொண்ட நடிகை த்ரிஷா கடந்த 1999-ம் ஆண்டு பிரஷாந்த் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை கேரக்டரில் நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 2002-ம் ஆண்டு சூர்யா இயக்குனர் அமீர் கூட்டணியில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து விஜய், அஜித் சூர்யா, விக்ரம், கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்து்ள த்ரிஷா சமீப காலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சோலோ நாயகியாக நடித்த மோகினி. நாயகி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவியது.
Happy birthday my everything 🌎 ❤️ pic.twitter.com/maiHsX47Kp
— Kundavai (@trishtrashers) July 2, 2022
இதனிடையே தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ராம், தமிழில் திரோடு உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் த்ரிஷா, பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியில் செல்வன் படத்தில் குந்தவை என்ற முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வரும் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் தான் ஏற்று நடித்துள்ள குந்தவை கேரக்டர் பெயரை தனது ட்விட்டர் பெயராக மாற்றியுள்ள த்ரிஷா தனது அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தான் சிறுவயதில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Ash🤗 pic.twitter.com/pgcyNgEuGB
— Kundavai (@trishtrashers) September 22, 2022
இந்த புகைப்படம் தற்போது ட்விட்டர் பாக்கத்தில் வைரலாகி வரும் நிலையில். ரசிகர்கள் பலரும் அவரது சிறுவயது புகைப்படத்தை ஆச்சரியமாக பார்த்து வருவதுடன் அவரது அம்மாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“