/tamil-ie/media/media_files/uploads/2023/05/Sobhitha.jpg)
சோபிதா துலிபாலா
இந்தியில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Sobhitha-2.jpg)
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவர், செஃப், காலக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குட்டார்சரி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Sobhitha-1.jpg)
மூதான் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Sobhitha-3.jpg)
அதன் பிறகு தமிழில் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Sobhitha-7.jpg)
இதன் மூலம் தமிழில் அறிமுகமான அவர், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திலும் அதே கேரக்டரில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Sobhitha-4.jpg)
பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்தற்போது இந்தியில் சித்தாரா, ஆங்கிலத்தில் மங்கி மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Sobhitha-6.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் சோபித துலிபாலா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/Sobhitha-5.jpg)
அந்த வகையில் தற்போது அவர் மொட்டை மாடியில் சேலையில் எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.