New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/PS-1.jpg)
பொன்னியின் செல்வன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
காந்தாரா படமும் நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
பொன்னியின் செல்வன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பொன்னியின் செல்வம் பாகம் 1, திரை காவியத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மணி ரத்னம் டைரக்ஷனில் செப்.30ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத் குமார், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, பார்த்திபன் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதுவரை ரூ.450 கோடிக்கு மேல் படம் வசூலித்துள்ளது. அமரர் கல்கியின் நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஓடிடி தளத்தில் என்று வெளியாகும் என குடும்ப ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, பொன்னியின் செல்வன் நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. எனினும் தேதி வெளியாகவில்லை. தற்போது அதிகாரப்பூர்வமாக தேதி வெளியாகியுள்ளது.
இதேபோல் கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய சினிமாவை புரட்டிப் போட்ட காந்தாரா படமும் நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
எனினும் இதுவரை படம் வெளியாகும் உறுதியான தேதி வெளியாகவில்லை. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.