ஹேக் செய்யப்பட்ட பிரபல நடிகரின் சமூக வலைதளம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் சர்தார் உள்ளிட்ட படங்கள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கார்த்தி இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் கார்த்தியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதை மீட்டெடுக்க முயற்சி நடந்து வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன். கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி த்ரிஷா ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் 2 பாகங்களாக உருவாக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 30-ந் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியிடப்பட்டது. இந்த படம் 500 கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை படைத்தது,
தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே 2-ம் பாகத்திற்காக ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், தற்போது சில காட்சிகளை சேர்ப்பதற்காக இயக்குனர் மணிரத்னம் மீண்டும் ஷூட் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ப்ரைஸ் கொடுத்த கயல் நடிகை
பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆனந்தி. தொடர்ந்து பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் நடித்தபோது அப்படத்தின் துணைஇயக்குனரான சாக்ரட்டீஸ் என்பரை திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், இவரது நடிப்பில் தயாரான யூகி படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆனந்தி இந்த படத்தின் நடித்தபோது தான் கர்ப்பமாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
கமல் 234 அப்டேட் கொடுத்த உதயநிதி
விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்து தனது 234 வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இது குறித்து பேசியுள்ள உதயநிதி, கமல் 4 நாட்களுக்கு முன்புதான் இதை தெரிவித்ததாகவும், இந்த படத்திற்காக 3 கதைகளக் தயாராக உள்ளதாகவும், எந்த கதை படமாக்கப்பட உள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் 2-ம் பாகம்
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரன் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி ரூ 1000 கோடிக்கு மேல் வசூலித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குனர் ராஜமௌலி பேசியுள்ளார். அதில் நானும் எனது அப்பாவும் இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து விவாதித்தோம். தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை தனது அப்பா எழுதி வருவதாக கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“