scorecardresearch

Ps 1 Trailer twitter Reactions:  ”இது மணி சார்ரால மட்டும்தாம் முடியும்”- ரசிகர்கள் ஆரவாரம்

‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்

Ps 1 Trailer twitter Reactions:  ”இது மணி சார்ரால மட்டும்தாம் முடியும்”- ரசிகர்கள் ஆரவாரம்

 ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசரும், ‘பொன்னி நதி பாக்கணுமே’ பாடலும், அதன்பின்னர் வெளியான ‘சோழா சோழா’ பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஒட்டுமொத்த திரைதுறையினரும் கலந்து கொண்டனர்.

மேலும் இது குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  பொன்னியின் செல்வம் நாவலை வாசித்த ரசிகளுக்கு படத்தின் டீசர் வெகுவாக பிடித்திருக்கிறது. எல்லா கதாபாத்திரத்தையும் இரே டீசரில் வெளிகாட்டிருப்பது பூரிப்படைய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நாவலை வாசிக்காதவர்களுக்கும் இது ஆவல் ஏற்படுத்தி உள்ளது. வசூல் வேட்டையில் மாஸ் ஹிட்டான பாகுபலி, ஆர்ஆர் படங்களைவிட அதிக வரவேற்பும் ஆதரவும் பொன்னியின் செல்வத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ponniyin selvan trailer twitter reactions overwhelming