தளபதி 65 லக்கி ஜோடி… பூஜா ஹெக்டே ஸ்டைலிஷ் போட்டோஸ்

நடிகை பூஜா ஹெக்டே முதன் முதலில் தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகு, பூஜா ஹெக்டே, விஜய்யுடன் தளபதி 65 படத்தில் ஜோடி சேர்ந்ததையடுத்து, மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.

pooja hedges, pooja hedges stylish photos, pooja hegde acting in vijays thalapathy 65, thalapathy 65, பூஜா ஹெக்டே, பூஜா ஹெக்டே புகைப்படங்கள், விஜயுடன் ஜோடி சேர்ந்த பூஜா ஹெக்டே, விஜய் படம், தளபதி பூஜ ஹெக்டே ஸ்டைலிஷ் போட்டோஸ், vijay, vijay new movie, pooja hegdes photos

‘தளபதி 65’ படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ள பூஜா ஹெக்டேவின் ஸ்டைலிஷ்ஷான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு, திரையரங்குகளில் வழக்கம் போல, திரையரங்குகள் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலைக் குவிக்குமா, பெரிய நடிகர்களின் படங்கள் பிளாக்பஸ்டராகுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், விஜய் – விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்து வெற்றி பெற்றது. விஜய் நடித்த 64வது படமான மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்தார்.

இந்த நிலையில், தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்திற்கு தளபதி 65 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டதுமே ஜோடியாக நடிக்க உள்ள அந்த லக்கி நடிகை யார் என்று விஜய் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்தது. தளபதி 65 படத்தில் நடிக்க உள்ள அந்த லக்கி நடிகை பூஜா ஹெக்டேதான் என்று அறிவிக்கப்பட்டது.

தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

நடிகை பூஜா ஹெக்டே முதன் முதலில் தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகு, பூஜா ஹெக்டே, விஜய்யுடன் தளபதி 65 படத்தில் ஜோடி சேர்ந்ததையடுத்து, மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.

கோலிவுட், டோலிவுட் ஆகிய தென்னிந்திய சினிமாக்களிலும் பாலிவுட்டிலும் பிரபலமான பூஜா ஹெக்டே தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரிடம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் உள்ளது.

பிரபாஸ், சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய பெரிய நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க கம்மிட் ஆனதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் பிரபலமாகியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் தென்னிந்திய சினிமாக்களிலும் பாலிவுட்டிலும் ஒரு வெற்றிகரமான நடிகையாக மாறியுள்ளார்.

பூஜா ஹெக்டே ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் அவருடைய ஸ்டைலிஷ்ஷான் தோற்றத்துக்கு புகழ்பெற்றவர். அவர் தனது பேஷன் உடகைகள், உடற்பயிற்சி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றவை. அதே போல பூஜா ஹெக்டே தனது ஆடம்பரமான வீட்டில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே சமீபத்தில் மும்பையில் உள்ள தனது புதிய ஆடம்பர அடுக்குமாடி வீட்டுக்கு குடிபெயர்ந்தார். பூஜாவின் வீடு எளிமையானது ஆனால் ரொம்ப அருமையாக உள்ளது. பூஜா ஹெக்டே தனது வீட்டில் எளிமையாக ரிலாக்ஸாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை குவித்துள்ளது.

அதே போல, பூஜா ஹெக்டே கடுமையாகவும் எளிமையாகவும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் ரசிகர்களின் லைக்குகளை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pooja hedges stylish photos pooja hegde acting in vijays thalapathy 65 movie

Next Story
பாடல் திருட்டு சர்ச்சையால் வேதனை: பாடகி மதுரமல்லி திடீர் மரணம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com