/tamil-ie/media/media_files/uploads/2020/07/Pooja-Hegde-gets-11-million-followers-on-instagram.jpg)
சமந்த அக்கினேனி - பூஜா ஹெக்டே
நடிகைகள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகள். அவர்கள் பல மொழிகளில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்கள். அல்லு அர்ஜுனுடன், பூஜா ஹெக்டே நடித்து சமீபத்தில் வெளியான ’ஆலா வைகுந்தபுரமுலூ’ படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
அவதூறு வழக்கு விசாரணை: வடபழனி காவல் நிலையத்தில் ஆஜரான வனிதா
/tamil-ie/media/media_files/uploads/2020/07/samantha-poojahegde1772020m.jpg)
அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, பூஜா ஹெக்டேவின் புகழ் அதிகரித்தது. இதனால் சமூக ஊடகங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இருப்பினும், பூஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக்கரால் ஹேக் செய்யப்பட்டு, சமந்தாவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டதால், அது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவரின் ரசிகர்களும் தங்கள் ஆதரவைக் காட்டினர். அவர்களுக்காக இணையத்தில் ஹேஷ்டேக்குகளை பிரபலப்படுத்தினர். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் சமந்தாவை முந்தியுள்ளார் பூஜா.
விஜய் டிவி ‘நாம் இருவர் நமக்கு இருவர்’: முன்னணி நடிகைகள் நீக்கம்
அவர் சமந்தாவை பின்னுக்குத் தள்ளி 11 மில்லியன் பின் தொடர்பாளர்களைப் பெற்றிருக்கிறார். சமந்தாவுக்கு 10.8 மில்லியன் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். பூஜா ஹெக்டே அடுத்ததாக 'ராதே ஷியாம்' படத்தில் பிரபாஸுடன் நடிக்கிறார். ’தி ஃபேமிலி மேன் சீசன் 2’-ல் நடிக்கிறார் சமந்தா.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.