/tamil-ie/media/media_files/uploads/2018/02/Actress-Poorna-New-Photos-9.jpg)
Actress-Poorna
சினிமாவில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் நடன பள்ளி ஆரம்பிப்பதே எனது லட்சியம் என நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
நடிகை அசின், இந்தி படங்களுக்கு சென்ற போது, அவரைப்போலவே முகசாயல் கொண்ட நடிகை பூர்ணா அறிமுகமானார். திரைத்துறைக்குள் நுழைந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. இன்று வெளியாகியுள்ள சவரக்கத்தி படத்தில் அவர் குழந்தைகளின் தாயாக நடித்துள்ளார். அவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு தகறாறு படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அப்போதும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. ஓராண்டுக்கு மேலாக அவர் வீட்டில் சும்மா இருந்தார். அப்போது அவர், இனி சினிமாவை நம்பி பிரயோஜனம் இல்லை. பேசாமல் நடனப்பள்ளி ஆரம்பிக்கலாம் என்று நினைத்துள்ளார்.
கிளாசிக் டான்ஸ் முறைப்படி கற்றுள்ள அவர், பி.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுள்ளார். அப்போது, அவர் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதற்காக வெஸ்டன் நடனம் கற்க ஆரம்பித்துள்ளார். பின்னர் படிப்படியாக எல்லா வகை நடனங்களையும் கற்றுக் கொண்டாராம். இப்போது பெங்களூரில் குச்சுப்புடி நடனம் தொடர்பாக பி.ஹெச்.டி படித்து வருகிறார்.
நடிப்பும் நடனமும் எனது கண்கள் என்று சொல்லும் பூர்ணாவின் சின்ன வயது கனவே நடன பள்ளி ஆரம்பிப்பதுதானாம். அவரே மாணவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்க ஆசைப்படுவதால், இப்போது உடனடியாக பள்ளி ஆரம்பிக்கவில்லை என்கிறார், பூர்ணா. சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், ஷோபனா போல நடனப்பள்ளி ஆரம்பித்து நடத்த ஆசைப்படுகிறார்.
சீக்கிரமே டாக்டர் பூர்ணாவாக வலம் வருவார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.