தமிழ் தொலைக்காட்சிகளில் என்னதான் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் கேம் ஷோக்கள் வந்தாலும் சீரியல்களுக்கென்று தனி இடம் உண்டு. ரியாலிட்டி ஷோக்களை விட சீரியல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில், ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’பூவே பூச்சூடவா’. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரேஷ்மா முரளிதரன், கார்த்திக் வாசுதேவன் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் ரேஷ்மா, சக்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரேஷ்மாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் தற்போது ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரேஷ்மாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் அந்த தகவல் தவறானது, இப்போதாவது புரிஞ்சுக்கோங்க, முற்றிலும் வதந்தி தான், எப்போதுமே சக்தி ரேஷ்மாதான் என நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
“ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கிறது. எனக்கு பதிலாக சக்தியாக வேறொரு நடிகை நடிக்க போகிறார் என பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது. வருத்தப்பட வேண்டாம். நான் திரும்ப வருவேன். வதந்திகளை பரப்பாதீர்கள்” என ரேஷ்மா பதிவிட்டு உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil