Celebraties wedding Tamil News: சின்னத்திரையில் நடிக்கும் நடிகை – நடிகர்கள் தற்போது காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் பூவே பூச்சூடவா சீரியலில் ஜோடியாக நடித்த ரேஷ்மா முரளிதரன் மற்றும் மதன் பாண்டியன் ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணைந்துவிட்டனர். இந்த ஜோடி பூவே பூச்சூடவா சீரியலுக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘அபி டைலர்’ சீரியலிலும் ஜோடியாக வலம் வருகின்றனர்.


ரேஷ்மா – மதன் ஜோடி சில தினங்களுக்கு முன்பாக இந்த மாதம் 15ம் தேதி தங்களின் திருமணம் நடைபெற உள்ளது என அறிவித்திருந்தனர். அதன்படி, இவர்களது திருமணம் நேற்று திங்கள் கிழமை (15ம் தேதி) நெருங்கிய நண்பர்கள், மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இந்த திருமண விழாவில் சின்னத்திரை பிரபலங்கள், ஜனனி அசோக் குமார், தனலட்சுமி சிவா, கதிர் VJ, அக்ஷயா கிம்மி, ஜெயஸ்ரீ, சஞ்சய் ராஜா, சோனா ஹைடன் மற்றும் சமீபத்தில் திருமணமான ஷபானா-ஆர்யன் ஜோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


ரேஷ்மா – மதன் ஜோடியின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“