இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட பிக் பாஸ் பங்கேற்பாளர்!

பிக்பாஸ் சீசன் 1-ல் பங்கு பெற்ற கத்தி மகேஷை போலீசார் நேற்று இரவோடு இரவாக கைது செய்தனர்.

கடந்த ஆண்டு தெலுங்கில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் கத்தி மகேஷ். இவர் சினிமா விமர்சகராகவும், பத்திரிகையாளராகவும் பணிபுரிந்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் குறுகிய காலத்தில் பொதுமக்கள் மத்தியில் பிரலமான நபராக கத்தி மகேஷ் மாறினார்.

Kathi Mahesh : கத்தி மகேஷ்

கத்தி மகேஷ்

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நடிகை ஸ்ரீரெட்டி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து துணை நடிகை ஒருவர் கத்தி மகேஷ் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் . இந்நிலையில் இந்து மக்கள் வணங்கும் கடவுளான ஸ்ரீராமன் பற்றியும் ராமன் குறித்த தூய்மையை விமர்சிக்கும் விதமாகவும் எழுதி வந்த கத்தி மகேஷ் மீது ஸ்ரீபீடம் ஸ்வாமி பரிபூரானந்தா சார்பில் அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் நடவடிக்கையாக, கத்தி மகேஷை நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கத்தி மகேஷ் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவரின் இந்த கைது நடவடிக்கை தெலுங்கு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close