பிரபல டைரக்டர் படத்தில் பிக் பாஸ் பிரபலமா? சத்தமே இல்லாமல் முடிந்த ஷூட்டிங்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா படத்தில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரைஸா வில்சன் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் முதல் பாகம் நிகழ்ச்சியில் பஙேற்ற போட்டியாளர்களில் ஒருவர் ரைசா வில்சன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு மாடெலிங் மற்றும் ஒரு சில படத்தில் சிறிய ரோல் செய்துள்ளார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவிலான புகழை பெற்றுள்ள நிலையில், ‘பியார், பிரேமா, காதல்’ படத்தில் கதாநாயகியாகவே நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது அடுத்த பம்பர் பரிசு ரைசாவுக்கு அடித்துள்ளது.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை தமிழில் இயக்குநர் பாலா இயக்குகிறார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகியுள்ளார். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், மேகா கதாநாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் ரைஸா வில்சனும் இப்படத்தில் நடித்திருக்கிறார். வர்மா படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை ரைஸா முடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாலினி பாண்டே கதாபாத்திரத்தில் மேகா நடிக்கவுள்ள நிலையில் ரைஸாவின் கதாபாத்திரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

×Close
×Close