பழம்பெரும் குணசித்திர நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை நேற்று காலமானார்.
Advertisment
லால்குடியை சொந்த ஊராக கொண்டவர் கோபால ரத்தினம். இவரும் பழம்பெரும் நடிகருமான நாகேஷ் ஆகியோரும் ஒன்றாகவே நாடகங்களில் நடித்து வந்தவர்கள். 50 ஆண்டுகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கோபு. அவருக்கு வயது 85. குணர்சித்திர கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற கோபு, எம்.ஜி.ஆர, சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.
டைப்பிஸ்ட் கோபு காலமானார்
நகைச்சுவை கதாபாத்திரங்களில் மிகவும் புகழ்பெற்ற இவரது திரைப்படங்களை இந்தத் தலைமுறை ரசிகர்கள் கூட ரசித்துப் பார்க்கின்றனர். வயது முதிர்வு காரணமாக இவருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் வயதின் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்.
நேற்று சென்னையில் காலமான டைப்பிஸ்ட் கோபுவுக்கு திரை உலகத்தினர் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 11 மணி அளவில் அவரது இறுதி சடங்கு, சென்னை அயப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.