தென் திரையுலைகில் பிரபலமான நடிகை அனுப்பமா:
அனுப்பமா பரேஸ்வரன் மலையாளத்தில் மிகவும் பிரபலமான “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தெலுங்கு மொழியில் பல படங்கள் நடித்தார்.
2016ல் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான இவர், அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அனுப்பமா தற்போது பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
அனுப்பமாவின் சொந்த ஊரான கேரளாவில் வெள்ளம் சூழ்ந்து பல பகுதிகளை நாசமாக்கியுள்ளது. இந்த வெள்ளத்தினால் பலரும் பலியாகியுள்ளனர். இது குறித்து அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
This picture made me cry ???????? https://t.co/8ZOdoPxbba
— Anupama Parameswaran (@anupamahere) 13 August 2018
ஒரு சிறிய பெண், கூடை ஒன்றில் தனது நாயை வைத்துக்கொண்டு தலை மேல் தூக்கி செல்லும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். இதனை பகிர்ந்த அவர் “இந்த புகைப்படம் என்னை அழ வைத்தது ???? ” என்று தன் டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக கூறியிருக்கிறார்.