பிரபல தமிழ் நடிகைக்கு கோவாவில் நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்… அடுத்த ஆண்டு திருமணமா?

பிரபல பேட்பிட்டன் விளையாட்டு வீரர் மற்றும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகைக்கும் ரகசியமாக நிச்சியதார்த்தம் நடந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை டாப்ஸிக்கு அவரது பாய் பிரண்டுடன் ரகசிய நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிச்சயம் கோவாவில் ரகசியமாக…

By: July 27, 2018, 1:07:54 PM

பிரபல பேட்பிட்டன் விளையாட்டு வீரர் மற்றும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகைக்கும் ரகசியமாக நிச்சியதார்த்தம் நடந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை டாப்ஸிக்கு அவரது பாய் பிரண்டுடன் ரகசிய நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிச்சயம் கோவாவில் ரகசியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் டாப்ஸிக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வராவில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி.

tapsee

அங்கு அவருக்கு திருப்திகரமான வாய்ப்புகள் அமைந்தன. இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தலா ஒரு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். டாப்ஸி தனது பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது பேச்சு இருந்து வந்தது. ஆனால் தனது பாய்பிரண்ட் குறித்தும் அவர் பற்றி வெளியான தகவல் குறித்தும் டாப்ஸி வாய்திறக்காமல் இருந்து வருகிறார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர் மேதிஸ் போ, மற்றொரு வீரர் தனிஷ் ஆகியோரிடம் நெருக்கமாக அவர் பழகி வந்தார்.

tapsee engagement

இந்நிலையில் டாப்ஸிக்கும், மேதிஸுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக இணைய தளங்களில் ஒரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறது. சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார் டாப்ஸி. அங்கு மேதிஸும் வந்திருந்தார். எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

ரகசியமாக நடந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கவே இவர்கள் கோவா சென்றதாக கூறப்படுகிறது. தற்போது கையில் உள்ள படங்களை முடித்து கொடுத்தபிறகு டாப்ஸியின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Popular tamil actress got secretly engaged to famous sports person

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X