Indian Music Director A R Rahman Vs Telugu Strar Balakrishna : ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தனக்கு தெரியாது என்று தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என.டிஆரின் மகனுமான நந்தமுரி பாலகிருஷ்ணா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் அரசியல்வாதி பாலகிருஷ்ணா. ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என.டி.ஆரின் மகனான இவர், தெலுங்கு சினிமாவில் தனக்கென தனிரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். சமீபத்தில் டிவி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், "ரஹ்மான் யார் என்று எனக்குத் தெரியாது. ஆஸ்கார் விருது பெற்றுள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் யார் என்று தெரியாது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, அவரது தந்தை, மறைந்த நடிகர்-அரசியல்வாதி என்.டி.ராமராவ் அவர்களின் "கால் விரல் பாதத்திற்கு சமம் என்று குறிப்பிட்ட அவர், தெலுங்கு சினிமாவிற்கு எனது குடும்பம் அளித்த பங்களிப்பை எந்த விருதும் ஈடுசெய்ய முடியாது. அதை விருதுகள் தான் உணர வேண்டும், என் குடும்பம் உணரவேண்டிய அவசியம் இல்லை. விருதை வழங்குவோருக்குதான் மரியாதை மற்றும் பாக்கியம், எஸ்.ஆர் என்.டி.ஆருக்கு அல்ல. என் தந்தை பாரத ரத்னாவை விட உயர்ந்தவர் என்று கூறியுள்ளார். "
தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் பற்றி பேசிய அவர், “ஒரு படத்தை முடிக்க பல ஆண்டுகள் எடுக்கும் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூனைப் போலல்லாமல் எனது படப்பிடிப்புகளை விரைவாக முடிக்க விரும்புகிறேன். நான் பணிபுரியும் விதம், குறைந்த நேரத்தில் அதிக ஹிட் படங்களை செய்கிறேன். என்று கூறியுள்ளார்.
பாலகிருஷ்ணாவின் இந்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த அவரது கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் இது ஆஸ்கார் விருது பெற்ற இசை அமைப்பாளர் ரஹ்மானின் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவிற்கு எதிராக ட்வீட்டரில் கருத்தக்களை கூறி வருகின்றனர். இதற்கு பாலகிருஷ்ணாவின் ரசிகர்களும் எதிர்கருத்து தெரிவித்து வரும் நிலையில், ட்விட்டில், '#whoisbalakrishna' என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு இசையமைப்பாளரும் கதையின் கருவிற்கு ஏற்ப தனது சொந்த மெல்லிசையை அமைக்கின்றனர். அந்த வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சிறப்பான பணியின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறியுள்ளா.
ஒரு மூத்த நடிகர் உலகளவில் பிரபலமான ஒரு இசையமைப்பாளர் குறித்து எப்படி இந்த மாதிரி ஒரு கருத்தை கூறலாம்? தெலுங்கின் முன்னிணி இயக்குநர் ராஜமௌலி குறித்து தமிழ் நடிகர் ஒருவர் பேசிளால் ஏற்றுக்கொள்வார்களா என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil