போஸ்டர் காப்பி… முருக இயக்குநர் போட்டி… கவலையில் டிவி ஹீரோ

இப்படி ஒரு கெட்ட பெயர் வந்துவிட்டதே என்று கவலையில் இருக்கிறார்களாம்.

By: Updated: June 10, 2017, 11:33:58 AM

பெரிதும் தான் எதிர்பார்த்திருக்கும் படத்தின் போஸ்டர் வெளியிட்ட உடனேயே காப்பி என்று கண்டுபிடிக்கப்பட்டதால் கடும் மன அதிருப்தியில் இருக்கிறார்களாம் அந்த பட தயாரிப்பாளரும் ஹீரோவும்.

டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த ஹீரோ தனது சொந்த தயாரிப்பில் மேனேஜரை பினாமியாக்கி ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். காஸ்டிங், கதை, செட் என்று அனைத்திலும் பெரிய அளவில் செலவு செய்திருக்கும் ஹீரோவும் தயாரிப்பாளரும் அந்த படத்தை இன்னும் பெரிய தொகைக்கு விற்றுவிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் காப்பி என்று உடனேயே சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் கழுவி ஊற்றப்பட்டது. இது இருவரையும் அதிருப்தியாக்கி இருக்கிறது.

ஏற்கனவே தாங்கள் அறிவித்திருக்கும் தேதியில் முருக இயக்குநரின் பிரம்மாண்ட படம் வெளியாகப்போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. அந்த படம் தங்கள் படத்தை பாதிக்குமோ… தேதியை மாற்றலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே இப்படி ஒரு கெட்ட பெயர் வந்துவிட்டதே என்று கவலையில் இருக்கிறார்களாம். கவலை இயக்குநர் மீது கோபமாக மாறியிருக்கிறது என்கிறார்கள்.

முருக இயக்குநர் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் இணைய ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Poster copy muruga director contest tv hero in sad

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X