Today Release Pottu, Boomerang and Sathru Movie Review : கடந்த வாரம் 4 படங்கள் வெளியாகி 2 படங்கள் வசூலை குவித்த நிலையில் இன்று பொட்டு, பூமராங் மற்றும் சத்ரு ஆகிய 3 படங்கள் வெளியானது.
எல்லா வாரமும் ஏதாவது ஒரு புதிய படங்கள் வெளியாவது வழக்கம். பெரிய பட்ஜெட்டில் இல்லையென்றாலும், சிறிய பட்ஜெட்டிலாவது நிச்சயம் இரண்டு படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரம் நடுத்தர பட்ஜெட்டில் 3 படங்கள் வெளியானது.
Today movie release : இன்றைய ரிலீஸ் படங்கள்
பல ஆண்டுகளாக படப்பிடிப்புகள் முடிந்தும் வெளியாகாமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு இறுதியாக தியேட்டர்களில் கால் பதிக்கிறது நடிகர் பரத்தின் பொட்டு. பின்னர் விவசாயிகள், தண்ணீர் பிரச்சனை என சமூக நலன் விஷயங்களை கொண்டு நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாக தயாராக இருக்கிறது பூபராங்க். மேலும், பரியேரும் பெருமாள் மற்றும் சிகை ஆகிய பாங்கள் மூலம் பிரபலமான கதிர், முதன் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்ரு படமும் வெளியானது.
1.00 AM : இன்று வெளியான மூன்று படங்களில் பூமராங்க் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக கதிரின் சத்ரு படத்தை ஆர்வமாக பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.
12.30 AM : படம் முழுவதும் நொடிக்கு நொடி சுவாரசியம் குறையாமல் இருக்கிறது. காக்கிச் சட்டையில் கலக்கலாக இருக்கிறார் கதிர் என்று இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூறியிருக்கிறார்
#Sathru interesting & Engaging through and through.@am_kathir in Khakki, looks brilliant#Laguparan kalakkiteenga
All the best ????
— PS Mithran (@Psmithran) 7 March 2019
12.00 AM : பூமராங் படத்தை பார்க்கும் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இண்டர்வல்லுக்கு முன்பு வரும் முதல் பாகமே திரைக்கதை சிறப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
Script Content Pakka #Boomerang 1st half Always Entertainment Suddenly Moving time.....@Atharvaamurali pic.twitter.com/JVu1dtpVbx
— Suriyaa Natarajan (@iam_suriya1) 8 March 2019
11.00 AM : தமிழகத்தில் மட்டும் மொத்தம் 355 தியேட்டர்களில் பூமராங்க் படம் வெளியாகிறது.
#Boomerang is releasing big and wide in 355 screens in Tamil Nadu. @Dir_kannanR @Atharvaamurali @RJ_Balaji via @tridentartsoffl pic.twitter.com/InmKnz8xxr
— Sreedhar Pillai (@sri50) 8 March 2019
10.30 AM : பூமராங்க, பொட்டு மட்டுமின்றி பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் புகழ்பெற்ற கதிர் நடிப்பில் சத்ரு படமும் வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் அவர் முதன் முதலாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நவீன் நஞ்சுந்தன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ருஷ்தி தங்கே, சுஜா வரூணி, நீலிமா, பொன்வண்ணன், மாரிமுத்து மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார்.
9.50 AM : அதர்வா நடிப்பில் இன்று வெளியாகும் பூமராங்க படத்தை ஆர். கண்ணன் இயக்கியிருக்கிறார். அதர்வா மட்டுமின்றி ஆர்.ஜே. பாலாஜி, மேகா ஆகாஷ், இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ராதன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.நதிநீர் இணைப்பை பேசும் இப்படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
Thalaivar wishes the team of #Boomerang. The film's core theme is about interlinking of rivers.
நதிநீர் இணைப்பை பேசும் #Boomerang படத்திற்கு சூப்பர்ஸ்டார் #ரஜினிகாந்த் வாழ்த்து!! #Thalaivar looking awesome????????????#Petta #2Point0 #Thalaivar166 pic.twitter.com/02mY216Cwi
— Vijay Andrews 2.0 (@vijayandrewsJ) 7 March 2019
9:30 AM : பரத்தின் பொட்டு படத்தை இயக்குநர் வி.சி. வடிவுடையான் உருவாக்கியிருக்கிறார். பரத்துடன் இணைந்து இனியா, ஸ்ருஷ்தி தங்கே, நமிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார்.
9:00 AM : இன்று மட்டும் 3 படங்கள் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.