ராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல்

Chinna Thambi Povoma Oorgolam: காதலையும் கிராமியத்தையும் விரும்பும் யாரும் வயது பேதமின்றி ரசித்து குதூகலிக்கத் தக்க பாடல் இது.

வீடியோ povoma oorgolam, povoma oorgolam song video, chinna thambi povoma oorgolam mp3, போவோமா ஊர்கோலம் பாடல் வீடியோ
வீடியோ povoma oorgolam, povoma oorgolam song video, chinna thambi povoma oorgolam mp3, போவோமா ஊர்கோலம் பாடல் வீடியோ

Povoma Oorgolam Song Video: அரண்மனைக் கிளியாக அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண், அதில் இருந்து விடுபடுகிறார். சிறையிலிருந்து விடுபட்ட பறவை போல, கிராமத்து வாய்க்கால் வரப்புகளில் அவர் தனது மனதுக்கு நெருக்கமான துணையுடன் துள்ளிப் பறக்கிறார்.

இந்தக் கதைப் பின்னணியில் அமைந்த பாடல்தான், ‘போவோமா ஊர்கோலம்’ எனத் தொடங்குகிற பாடல். 1992-ல் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சின்னத்தம்பி படத்தின் ஹிட் பாடல் இது! இந்தப் பாடலின் தொடக்கத்தில், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய காதலியின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இளையராஜா போட்டிருக்கும் மியூசிக்… அதாவது பாடலில் முதல் 28 செகண்டுகளே போதும்! ரசிகர்களையும் அப்படியே வாய்க்கால் வரப்புகளில் பறக்க வைத்துவிடுவார் ராஜா.

பாடகராக பெரும் புகழ் பெற்ற எஸ்.பி.பி.யின் குரலையும்விட, ஸ்வர்ணலதாவின் குரல் இந்தப் பாடலில் பெரிதும் பேசப்பட்டது. சுதந்திரக் காற்றை சுவாசிப்பவராக ஆடிப் பாடும் காதலியின் சந்தோஷம், இளமைத் துள்ளல் அத்தனையையும் தனது குரலில் அசாத்தியமாக ஸ்வர்ணலதா வெளிப்படுத்தியதே அதற்கு காரணம். எஸ்.ஜானகி, சித்ரா கொடிகட்டிப் பறந்த வேளையில், ஸ்வர்ணலதாவுக்கு இந்தப் பாடம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..

பிரபு- குஷ்புவை ராசியான ஜோடியாக திரையுலகில் முத்திரை குத்த வைத்தில் இந்தப் படத்திற்கு பெரும் பங்கு உண்டு. அந்த வகையில் இருவரும் ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் இது. கங்கை அமரன் வரிகளில், கீரவாணி ராகத்தில் அமைந்த இந்தப் பாடல், இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று.

இதோ, பாடல் வரிகள்:

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

அரமன அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா

பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரமன கொடுக்குமா

குளுகுளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவுழுது குடிசைய விரும்புமா

சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடைக்குமா

பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு

வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு

அதிசயமான பெண்தானே

புதுசுகம் தேடி வந்தேனே

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே

உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்ல

கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்

அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும்

போதும் போதும் உம் பாட்டு

பொறப்படப் போறேன் நிப்பாட்டு

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்

ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும்

காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்

போவோமா ஊர்கோலம்

பூலோகம் எங்கெங்கும்.


காதலையும் கிராமியத்தையும் விரும்பும் யாரும் வயது பேதமின்றி ரசித்து குதூகலிக்கத் தக்க பாடல் இது.

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Povoma oorgolam song video lyrics in tamil ilayaraja swarnalatha

Next Story
நடிகை அமலா பால் தந்தை காலமானார்actress amala paul, amala paul, Amala Paul's father passes away, அமலா பால், அமலா பால் தந்தை காலமானார், நடிகை அமலா பால், அமலா பால் தந்தை பால் வர்கீஸ், Actress Amala Paul's father no more, Amala Palul's dad passes away, Amala Paul's dad no more, அமலா பால் தந்தை மறைவு, Amala Paul's died
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com