‘கடைசி வரை கூடவே இரும்மா…’ கெஞ்சிய பவர்; ஒரு மார்க்கமா பதில் சொன்ன வனிதா!

Power star tease Vanitha vijaykumar viral video: கோபமாக பேசும் வனிதா; நக்கலடிக்கும் பவர் ஸ்டார்; வைரல் வீடியோ….

நடிகை வனிதா விஜயகுமாரிடம், பவர் ஸ்டார் சீனிவாசன் நக்கலடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நீங்க சிங்கார வேலன் கமல் மாதிரி ஹாஸ்பிட்டல்ல போய் படுத்துட்டா, நான் குஷ்பு மாதிரி ஓடி வர முடியுமா என பவர்ஸ்டார் சீனிவாசனிடம் வனிதா கோபத்துடன் கேட்க, எல்லாம் ஒரு ஃபீலிங் மா என நக்கலடிக்கிறார் பவர் ஸ்டார்.

தமிழ் சினிமாவில் விஜயுடன் சந்திரலேகா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த வனிதா விஜயக்குமார், பின்னர் சில காலம் வெளிச்சத்திற்கு வராமல் இருந்தார். பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார். தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதோடு, ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் வனிதா தனக்கென்று ஒரு யூடியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து, அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனிடையே வனிதா விஜயகுமாரும், பவர்ஸ்டார் சீனிவாசனும் மாலையும், கழுத்துமாக மணக்கோலத்தில் இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது. பின்னர் அது அவர்கள் சேர்ந்து நடிக்கும் பிக்கப் படத்திற்கான ப்ரோமோஷன் என கூறப்பட்டது.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எப்பவுமே வாழ்க்கையில் ஒரு பிளான் இருக்கும். பிளான் ஏ, பிளான் பி என பிளான் இசட் வரைக்கும் தயாரா இருக்கணும். ஒருத்தர் பிளானோடதான் இருக்காரு, என பவர் ஸ்டார் அருகில் செல்கிறார்.

அப்போது பவர் ஸ்டாரைப் பார்த்து “என்னாச்சு உங்களுக்கு” என்று வனிதா கேட்க, “ரொம்ப முடியலம்மா, ஓவர் பிரஷர், தலை வேற சுத்துதுமா, நீ பக்கத்துல இருந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்மா. என் கூட கடைசி வரை இருமா, அப்பத்தான் பிரஷர் குறையும்” என்று கூறுகிறார்.

அதற்கு வனிதாவோ, நீங்க ஸ்டண்ட் போட்டீங்க ஓகே. அதுக்காக சிங்காரவேலன் கமல்ஹாசன் மாதிரி கட்டுப் போட்டுக்கிட்டு வந்து ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தீங்க. கொஞ்சம் யோசிச்சு பார்த்தீங்களா, என்கிட்ட டேட் வாங்குனீங்களா, நான் இருக்கிறேனானு தெரிஞ்சுக்கிட்டீங்களா. மேலும் நீங்க பாட்டுக்கு போய் படுத்தா, நான் குஷ்பு மாதிரி ஓடி வர முடியுமா என கோபமாக கேட்கிறார். அதற்கு பவரோ, நான் எங்க படுத்தாலும், நீங்க எங்க இருந்தாலும் பறந்து வருவீங்கனு நினைச்சு ஒரு ஃபீலிங்குல படுத்துட்டேன்மா என்று கூறுகிறார்.

பவர் ஸ்டார் வனிதாவிடம் நக்கலாக பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில், ரசிகர்கள் பல்வேறு விதமாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Power star tease vanitha vijaykumar viral video

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com