Advertisment

மாப்பிள்ளை ஆனார் பிரபாஸ்... மணப்பெண் வேறுயாருமில்லை அவரே தான்!

ஒரு வேளை அது அனுஷ்காவாக இருந்தால் ஒட்டுமொத்த ரசிகரளின் ஆசையும் பலித்து விடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரபாஸ்

பிரபாஸ்

நடிகர் பிரபாஸூக்கு இந்த ஆண்டு திருமணம் என்ற செய்தி உறுதியாகியுள்ளது. கூடவே அவரை கல்யாணம் செய்துக் கொள்ள போகும் பிரபலம் குறித்த தகவலும் கசிந்துள்ளது.

Advertisment

பிரபாஸ் டும் டும் டும்:

தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லை தமிழ் சினிமாவிலும் இந்த ஜோடியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரையும் திரையில் பார்த்து கொண்டாடாத ரசிகர்கள் ரொம்பவும் கம்மி. எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அந்த ஜோடி யாரென்று..

பிரபாஸ் – அனுஷ்கா ஜோடி. இந்த ஜோடியை பாகுபலி படத்தில் பார்த்த பின்பு இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக ஏகப்பட்ட வதந்திகள் உலாவர ஆரம்பித்தன. அதற்கு ஏற்றார் போல் இந்த ஜோடிகளும் விருது நிகழ்ச்சிகள் , பொது விழாக்கள் என அனைத்திலும் ஒன்றாக கலந்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் தான் இருவரும் தங்களது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தன. ”எங்களது திருமணம் குறித்து மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வீண் வதந்தியை பரப்ப வேண்டாம்” என்று இருவரும் பேட்டியளித்தனர்.

அதன் பின்பு இவர்கள் குறித்த செய்திகள் குறைந்தன.அனுஷ்காவிற்கு மாப்பிளை பார்க்கும் வேலையை அவரின் குடும்பத்தார் மும்முரமாக துவக்கினர். அதே போல் பிரபாசின் தரப்பிலும், அவரின் தாயார் மணப்பெண் தேடுதல் வேட்டையில் இறங்கினார்.

publive-image

சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹரிகாவை விரைவில் பிரபாஸ் கரம் பிடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் பின்பு இந்த தகவல் இரு தரப்பில் இருந்தும் மறுக்கப்பட்டது. இந்நிலையில் அனுஷ்காவின் அம்மா பர்ஃபுல்ல ஷெட்டி மீண்டும் பிள்ளையார் சுழி போட்டு புதிய வதந்தியை ஆரம்பித்தார்.

பிரபல நாளிதழ் ஒன்றில் அவர் அளித்த பேட்டியில், “எங்களுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் ஹப்பி” என்று கூறியிருந்தார். இந்த பேட்டி அனுஷ்கா, பிரபாஸ் ரசிகர்களுக்கு பூஸ்டாக இருந்தது. இந்நிலையில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவருக்கும் இந்தாண்டே திருமணத்தை முடிக்க இரு வீட்டாரும் முடிவு எடுத்துள்ளனர்.

பிரபாஸின் உறவினர் ஒருவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பிரபஸூக்கு திருமணம் செய்ய இருப்படு உண்மை தான்.. கல்யாண பெண்ணும் உங்களுக்கு நன்கு தெரிந்தவர் தான்” என்று கூறி அடுத்த இண்ட் கார்ட்டை கொடுத்துள்ளார்.

இந்த செய்தியைக் கேட்ட  ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். ஒரு வேளை அது அனுஷ்காவாக இருந்தால் ஒட்டுமொத்த ரசிகரளின் ஆசையும் பலித்து விடும்.

Anushka Shetty Prabhas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment