நடிகர் பிரபாஸ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவியின் சகோதர் மகளும், நடிகையுமான நிஹரிகாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகின.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் பாகுபலிக்கு பிறகு தமிழ்நாட்டில் ரொம்ப ஃபேமஸ். பிரம்மாண்ட படைப்பான பாகுபலியில் ரியல் ஹீரோ போல் தோன்றி பெண்களின் உள்ளம் கவர்ந்த கள்வனாக மாறினான். ஆனால் படத்தின் பிரம்மாண்டத்தை காட்டிலும் பிரபாஸ் -அனுஷ்காவின் கெமிஸ்ட்ரி பெரிதாக பேசப்பட்டது.
இந்த படத்தில் இணைந்து நடித்த போதே அனுஷ்காவிற்கும் பிரபாஸூக்கும் காதல் வந்தது. கூடிய விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இவர்கள் கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகள், விருது மேடைகள் என எல்லா இடத்திலும் திருமணம் குறித்து கேள்விகள் எழுப்பட்டன.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/1-300x171.png)
ஒரு கட்டத்தில் இந்த கேள்விகளால் கடுப்பான இவர்கள், இனிமேல் திருமணம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதன் பின்பு தான் ஒரு வழியாக இவர்களின் காதல், திருமணம் குறித்த செய்திகள் வெளிவருவது குறைந்தன. இருவரும் திரைப்படங்களில் பிஸியாக நடிக்க சென்று விட்டனர்.
இந்நிலையில், தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பிரபாஸின் திருமணம் செய்தி மீண்டும் தீயாக பரவத் தொடங்கியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹரிகாவை விரைவில் பிரபாஸ் கரம் பிடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/CAR-4-300x169.jpg)
நிஹரிகா தமிழில் விஜய்சேதுபதியின் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்தவர். தமிழில் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் நிஹரிகா. இந்நிலையில், பிரபாஸ் வீட்டார் சீரஞ்சிவி குடும்பத்தினரிடம் இதுக் குறித்து பேசியதாகவும், விரைவில் நிச்சயார்த்தம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் பரவியுள்ளன.
இருந்த போது, சீரஞ்சிவின் தரப்பில் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஹரிகா தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அவரின் திருமணம் குறித்து தற்போது வரை முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இல்லை இல்லை என்று சொல்லி விட்டு, கடைசியில் திருமண தேதியை அறிவிக்கலாம் யாருக்கு தெரியும்!!!