/tamil-ie/media/media_files/uploads/2019/08/Prabhas-anushka-shetty.jpg)
பிரபாஸ் - அனுஷ்கா ஷெட்டி
Prabhas: 'சாஹோ' திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், ’பாகுபலி’ன் புகழ் பிரபாஸ் அந்தப் படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தெலுங்கு டிவி சேனல்களின் நேர்காணல்களில் கலந்துக் கொண்டார். அவரது ஹம்பிளான பதில்கள் ஊடகவியலாளர்களிடையே புன்னகை பூக்க செய்தது.
தெலுங்கு ஊடகங்களை தனக்கும் தனது ரசிகர்களுக்கும் இடையிலான பாலமாக கருதிய பிரபாஸ், சில கேள்விகளுக்கு ஆச்சரியமான பதில்களை கூறியுள்ளார். பல்வேறு விஷயங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் கூறும் ரேபிட் - ஃபயர் ரவுண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பிரபாஸ் அளித்த பதில்கள் வேடிக்கையானவை.
அந்த கேள்விகளும் பதில்களும் பின்வருமாறு
திருமணம்?
எல்லோரு கேட்கிறார்கள், திருமணம் செய்து கொள்ள வேண்டும்!
ஆன் ஸ்கிரீன் முத்தம்?
அவ்வளவு வசதியாக இல்லை
ரசிகர்கள்?
நிபந்தனையற்ற அன்பு வைத்திருக்கிறார்கள்
கிருஷ்ணம் ராஜு காரு?
அவர் குடும்பத்தின் அரசன்
இந்த இரண்டு கதாநாயகிகள் பற்றிய நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களைப் பற்றி கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,
காஜல்
நேர்மறைகள்: எனெர்ஜி
எதிர்மறை: ஆவரேஜ் டிரெஸ்ஸிங்
அனுஷ்கா
நேர்மறை: அழகான சூப்பர் ஸ்டார்
எதிர்மறைகள்: ஃபோனை எடுக்கவே மாட்டார், அது நானாக இருந்தாலும்...
பின்னர் அவருக்குப் பிடித்த பாலிவுட் நட்சத்திரங்களைப் பற்றி கேட்ட போது, சல்மான் கான் மற்றும் ஷாருக் தான் தன்னுடைய ஃபேவரிட் நடிகர்கள் என்றார்.
மேலும் தொடர்ந்த பிரபாஸ், "சிரஞ்சீவி காரு, என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட் நடிகர், அதோடு ரஜினிகாந்த் சாரும் எனக்கு மிகவும் பிடித்தவர். அவர்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்கள்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.