Prabhas Saaho: திரைப்பட இயக்குநர் சுஜீத்தின் 'சாஹோ' இந்த வார இறுதி நிலவரப்படி, உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் அதிக இடங்களைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்தின் '2.0' -வை வென்ற இப்படத்தால், 'பாகுபலி' முதல் வார இறுதி, சாதனையை முறியடிக்க முடியவில்லை.
பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள ‘சாஹோ’ திரைப்படம், விமர்சகர்களை இம்ப்ரெஸ் செய்ய தவறிய போதிலும், பார்வையாளர்களை நன்றாக கவர்ந்துள்ளதாகவே தெரிகிறது. கடந்த வெள்ளிக் கிழமை வெளியான இந்தத் திரைப்படம் நிறைய கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த பற்றாக்குறையாக ஸ்டோரி லைனே இதன் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
மோசமான விமர்சனங்கள் எழுந்தபோதிலும், நிறைய முரண்பாடுகளை எதிர்த்துப் போராடி பாக்ஸ் ஆபிஸில் ஓரிடத்தைப் பிடித்துள்ளது ‘சாஹோ’. முதல் வார இறுதியில் ரூ .79 கோடியை, பிரபாஸின் சாஹோ வசூலித்துள்ளது. இதனால், முதல் வார இறுதியில் ரூ .61.29 கோடியை வசூலித்த ரஜினிகாந்தின் '2.0' ஐ வென்றிருக்கிறது. ஆனால் எஸ்.எஸ். ராஜமெளலியின் 'பாகுபலி 2' படம் முதல் வார இறுதியில் வசூல் செய்த, 127.28 கோடி ரூபாயை ‘பீட்’ செய்ய முடியவில்லை.
தவிர, முதல் வார இறுதியில் 70.67 கோடி ரூபாய் வசூலித்த ஷாஹித் கபூரின் ’கபீர் சிங்’ படத்தையும் சாஹோ பின்னுக்கு தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.