பாகுபலி நாயகன் பிரபாஸ் சையப் அலிகான், கிருத்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகுபலி படத்தின் 2 பாகங்கள் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் நாயகனாக மாறிய பிரபாஸ் அதன்பிறகு நடித்த நாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்து. இதனால் பாகுபலி அளவுக்கு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட ஆதிபுருஷ் படத்தில் நடித்தார்.
இயக்குனர் ஓம் ராவத் இயக்கிய இந்த படம் ஜூன் 16-ந் தேதி (நேற்று) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானர். ஏற்கனவே வெளியான படத்தில் டிசர் மற்றும் டிரெய்லர்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஆதிபுருஷ் படம் தவறிவிட்டாலும் வசூலில் தவறவில்லை என்று சொல்லும் அளவுக்கு ஆதிபுருஷ் முதல் நாளில் ரூ 140 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் டி-சீரிஸ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக, திரைப்படங்களின் வர்த்தக ஆய்வாளர் கிரிஷ் ஜோஹர், ஆதிபுருஷ் படம் வெளிநாடுகளில் சுமார் ரூ 35 கோடி வசூலித்ததாகவும், உலகம் முழுவதும் முதல் நாள் மொத்த வசூல் ரூ 133 கோடி என்றும் ட்வீட் செய்திருந்தார். தொடர்ந்து இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் அறிக்கயைின்படி ஆதிபுருஷ், தெலுங்கு மார்க்கெட்டில் 58.5 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றுள்ளதாகவும், இந்தியில், ரூ.35 கோடியும், தமிழில் ரூ 70 லட்சமும், மலையாளத்தில் ரூ.40 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாக்ஸ்ஆபீஸ் இந்திய (BoxOfficeIndia.com) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிபுருஷ் படத்தின் வெளிநாட்டு வசூல் நிலவரம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் முதல் நாளில் படம் உலகளவில் ரூ. 140 கோடி வசூலித்துள்ளது. மேலும் இந்த வசூல் மேலும் அதிகரித்து இன்று 150 கோடியாக மாறும் என்றும் அறிவித்திருந்து. 2023 ஆம் ஆண்டில் இதுவரை அதிக வசூல் செய்த படமாக இருந்த பதான், முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூலித்துள்ளது. ஷாருக்கான் நடித்திருந்த பதால் படம் உலகம் முழுவதுமாக ரூ 1000 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்து..
ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் வசனங்கள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்டுக்காக கடுமையான நெகடீவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. இப்படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. Indianexpress.com திரைப்பட விமர்சகர் சுப்ரா குப்தா படத்திற்கு 2.5 ஸ்டார்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“