மருத்துவமனையில் பாகுபலியை காண ஆசைப்பட்ட சிறுவன்.... நேரில் ஓடோடி வந்த பிரபாஸ்!

அவன் ஆசையை அட்டையில் எழுதி புகைப்படமும் எடுத்திருந்தான்.

ஹைதராபாத்தில் நோயால் அவதிப்பட்டிருந்த சிறுவன் ஒருவனின் ஆசையை நடிகர் பிரபாஸ் நேரில் சென்று நிறைவேற்றியுள்ளார். இதனால் ரசிகர்கள் பிரபாஸை புகழ்ந்து வருகின்றனர்.

நேரில் வந்த பாகுபலி :

தெலுங்கில் நவம்பர் 1 ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் பிரபாஸுக்கு பாகுபலி படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகரித்தனர். குறிப்பாக பெண்களுக்கு  பிரபாஸ் மீது அதிக கிரேஸ் என்பது தெரிந்த ஒன்று.

இந்நிலையில் பாகுபாலி படத்திற்கு பிறகு,  அந்த கதாபாத்திரம் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த பெயரை வைத்து நிறைய வீடியோ கேம்ஸ்கள், கார்டூன்கள் வெளிவந்து குழந்தைகளை குஷிப்படுத்தினர்.

அப்படித்தான் பாகுபலி என்ற கதாப்பாத்திரம் மீது மதன் ரெட்டி என்ற 5 வயது சிறுவனுக்கு  அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.  பாகுபலியாக நடித்த பிரபாஸ் தான் நிஜ பாகுபலி என்று அவன் நம்பியுள்ளான்.  சமீபத்தில் மதன் ரெட்டிக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவனின் பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது  சிறுவன், மதன் ரெட்டி பாகுபலியை நேரில் பார்க்க வேண்டும் என்று  அடம்பிடித்துள்ளான். கூடவே அவன் ஆசையை அட்டையில் எழுதி புகைப்படமும் எடுத்திருந்தான்.

பாகுபலி

பிரபாஸின் ஃபேன்ஸ் பேஜில் இடம்பெற்ற புகைப்படம்

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. பிரபாஸ் ரசிகர்களும் இந்த படத்தை அதிகளவில் பகிர்ந்தனர்.  இதைப் பார்த்த நடிகர் பிரபாஸ் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற நேரில் வந்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

பாகுபலி

சிறுவனின் குடும்பத்தோடு நடிகர் பிரபாஸ்

அதுமட்டுமில்லாமல், சிறுவனின் உடல்நிலை சரியான பின்னர்,  மதன் ரெட்டி குடும்பத்தை தனது வீட்டிற்கும் அழைத்து சர்ப்பிரைஸ் அளித்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த பிரபாஸின் ரசிகர்கள் நெகிழ்சியுடம்  சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close