’அடுத்தவர் கணவரை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்’ – பிரபுதேவா மனைவி ஆவேசம்

Prabhu Deva : மற்றவர் கணவரை திருடிய நயன்தாரா தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

Prabhu deva's wife Ramlath curses Nayanthara
Prabhu deva's wife Ramlath curses Nayanthara

Ramlath Curses  Nayanthara : பிரபல நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தென்னிந்திய திரையுலகில் இருக்கும் சிறந்த நடிகைகளில் ஒருவராக அறியப்படும் இவர், 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தில் நடித்திருந்தார்.  நயன்தாராவின் காதல் கதைகள் அவரைப் பின்தொடரும் அனைவரும் நன்கு அறிந்ததே… மேலும் இது பல ஆண்டுகளாக அவ்வப்போது பேசு பொருளாகும்.

20.3 கோடி பார்வைகள்… உலக சாதனை படைத்த மோடி வீடியோ!

இந்நிலையில், பிரபு தேவாவின் முன்னாள் மனைவி ரம்லத் அளித்த பேட்டியில் ‘தர்பார்’ நடிகையை பயங்கரமாக திட்டி தீர்த்துள்ளார். காதல் பற்றி சமீபத்தில் பேசிய நயன்தாரா, “நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது. அங்கிருந்து அது வெளியேறும்” என்றார். நயன்தாரா இறுதியாக ஒரு காதலை முறித்துக் கொண்டார். நம்ப முடியாத ஒருவருடன் வாழ்வதை விட, தனியாக வாழ்வதே நல்லது என்று அவர் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகின.

இதைப் பற்றி பிரபு தேவாவின் முன்னாள் மனைவி ரம்லத் பேசுகையில், ”பிரபு தேவா நயன்தாராவை காதலிக்கிறார் என்று அப்போது என்னால் நம்ப முடியவில்லை. அவர் ஒரு நேர்மையான கணவராக கடந்த பதினைந்து ஆண்டுகளாக குடும்பத்தை கவனித்து வருவதாக நினைத்தேன்” என்றார். பிரபு தேவா சமீபத்தில் ரம்லத்துக்கு ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்தார்.  இப்போது அவர் மாறிவிட்டதாக ரம்லத் உணர்கிறாராம். நயன்தாராவைப் பற்றி பேசிய ரம்லத், ”தனது கணவரை தன்னிடம் இருந்து அபகரித்து விட்டதாகவும், மற்றவர் கணவரை திருடிய நயன்தாரா தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் தொடர்ந்த அவர், ”நயன்தாராவை எங்காவது பார்த்தால் உதைப்பேன்” என்றும் கூறினார்.

20.3 கோடி பார்வைகள்… உலக சாதனை படைத்த மோடி வீடியோ!

இவ்வாறு முன்பு ஒரு நேர்க்காணலில் ரம்லத் பேசிய இந்த விஷயங்கள் தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Prabhu devas ex wife ramlath curses nayanthara

Exit mobile version