/indian-express-tamil/media/media_files/xY0a3sbFjEpr67rqJPh9.jpg)
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்; முதல் பதிவு என்ன பாருங்க!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மிகவும் உறுதியான போட்டியாளராக பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி யாரும் எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு, எக்ஸ்-ல் பதிவிட்ட முதல் பதிவு வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொக்குத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட பிரதீப் ஆண்டனி சனிக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் வெளியேற்றப்பட்டார். பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், ரெட் கார்டு மூலம் தங்களின் அபிமான போட்டியாளரை வெளியேற்றுவது நியாயமற்றது என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரதீப்பின் பிரபலத்தை முறியடிக்க முடியாத சக போட்டியாளர்கள் அவரை வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சிவப்பு அட்டை (Red Card) நாடியதாக கூறப்படுகிறது. 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, பிரதீப் தனது நண்பர்கள் குழுவுடன் மீண்டும் இணைந்தார். மேலும், அவர் அவர்களுடன் ஜாலியாக இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
My BB7 Trophies 🔥#EdhoEnnalaMudinjathu#SimpleStarpic.twitter.com/DjINKNBl2R
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 4, 2023
பிரதீப் 'பிக் பாஸ் 7' சீசனில் பெற்ற அனைத்து சிறிய பரிசு பொருட்களின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் மற்றும் #SimpleStar என்ற ஹேஷ்டேக்குடன் “இது தான் என்னால் திரட்ட முடிந்தது” என்று தமிழில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி, “இந்த கொடூரமான வெளியேற்றத்திற்கு நீங்கள் தகுதியற்றவர். இங்கு யாரும் சரியானவர்கள் அல்ல. உங்கள் மீதான குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது. பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் உங்கள் தனித்துவமான நடிப்பிற்காக நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்.” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.