’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!

உதவி தேவைப்படும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, உணவு விநியோகம் செய்தனர்.

prakash raj
prakash raj

நிவர் புயலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சென்னை நகரம் மும்முரமாக இருந்தபோது, நடிகரும் இயக்குநரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரகாஷ் ராஜ் சென்னையில் உள்ள தனது கடற்கரை வீட்டிலிருந்து ஒரு சின்ன வீடியோவை வெளியிட்டிருந்தார்.

கடலூர், புதுச்சேரிக்கு அதிக மழை: நிவர் உருவாக்கிய பாதிப்புகள்

அந்த வீடியோவை “இயற்கையுடனான உரையாடல்கள்” என்று குறிப்பிட்டிருந்தர். இயற்கை மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தை அனைவரும் அறிவர். எப்போதும் இயற்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் பிரகாஷ் ராஜ். புதன்கிழமை மாலை, நிவர் புயல் தமிழ்நாட்டைத் தாக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னர், பிரகாஷ் ராஜ் அறக்கட்டளையின் கீழ் ஒரு சில தன்னார்வலர்களின் உதவியுடன் அவர் செய்து வரும் பணிகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்டார்.

கோவளத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சில படங்களையும் அவர் வெளியிட்டார். மக்களுக்கு வழங்கக்கூடிய உதவியால் மிகவும் மகிழ்ச்சியடைந்த பிரகாஷ், வாழ்க்கைக்கு திரும்பக் கொடுப்பதில் பாக்கியவானாக உணர்ந்ததாகக் கூறினார். புகைப்படங்களில் அவரது குழுவின் தன்னார்வலர்கள் உதவி தேவைப்படும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, உணவு விநியோகம் செய்தனர். “நிவர் சூறாவளி புயல் தாக்கப் போகிறது.. நாங்கள் களத்தில் இருக்கிறோம்… எங்கள் அண்டை வீட்டார் சுந்தரின் மேற்பார்வையில், உள்ளூர் இளைஞர்கள் செய்த பணி. இது ஒரு பிரகாஷ்ராஜ் ஃபவுண்டேஷனின் முயற்சி. “வாழ்க்கைக்கு திரும்ப கொடுப்பதன்” மகிழ்ச்சியைப் பெற ஆசிர்வதிக்கப்பட்டவன்” என்று தெரிவித்திருந்தார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Prakash raj cherish giving back to life prakash raj foundation

Next Story
ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்லும் ஜல்லிக்கட்டு திரைப்படம்Oscars 2021, Oscars 2021 nominations, Best International Feature Film, ஆஸ்கர் விருது 2021, ஆஸ்கர் விருது, ஜல்லிக்கட்டு, மலையாளம், Best International Feature Film oscars, oscars, oscar, 2021 oscars
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com