/tamil-ie/media/media_files/uploads/2021/08/Prakash-Raj-wedding-anniversary-1200by667.jpg)
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது மகனுக்காக மீண்டும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழின் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரான பிரகாஷ்ராஜ் தேசிய விருது பெற்றவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் அவரது மனைவி போனி வர்மா ஆகியோர் தங்களது 11 வது திருமண நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 24) கொண்டாடினர். இந்த ஆண்டு அவர்களின் திருமண நாள் தனித்துவமானது, ஏனெனில் அவர்களின் மகன் வேதாந்த் தனது பெற்றோரின் திருமணத்தை கண்டு களித்தார். பிரகாஷ்ராஜ் – போனி வர்மா தம்பதியினர், தனக்கு முன்னால் திருமணம் செய்து கொள்ள விரும்பிய மகனின் வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். பிரகாஷின் மகள்கள் மேகனா மற்றும் பூஜா ஆகியோரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த திருமணம் மற்றும் திருமண நாள் கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “இன்று இரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம் .. ஏனென்றால் எங்கள் மகன் #வேதாந்த் இதைப் பார்க்க விரும்பினார். குடும்ப தருணங்கள் #ஆசீர்வாதம். " என்று பதிவிட்டிருந்தார்.
We got married again tonight..because our son #vedhant wanted to witness it 😍😍😍. Family moments #blisspic.twitter.com/Vl29VlDQb4
— Prakash Raj (@prakashraaj) August 24, 2021
பிரகாஷ் ராஜ், போனி வர்மாவை 24 ஆகஸ்ட் 2010 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் ஏற்கனவே லலிதா குமாரியை திருமணம் செய்திருந்தார், அவர்கள் 2009 இல் விவாகரத்து பெற்றனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மற்றொரு ட்வீட்டில், பிரகாஷ் தனது திருமண விழாவில் இருந்து போனி வர்மாவுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். " அந்த இரவில் அந்நியர்களுக்கு... அது சரியாக மாறியது '.. என் அன்பான மனைவிக்கு நன்றி .. ஒரு அருமையான நண்பராக இருந்ததற்கு .. எங்கள் வாழ்க்கையில் நாங்கள் காதலர் மற்றும் ஒரு சிறந்த இணை பயணியாக இருக்கிறோம் .. #மகிழ்ச்சியான திருமணநாள்விழா @PonyPrakashraj," என பதிவிட்டிருந்தார்.
“It turned out so right.. for strangers in the night” .. thank you my darling wife .. for being a wonderful friend.. a lover and a great co traveller in our life together..🤗🤗🤗 #happyweddinganniversary@PonyPrakashrajpic.twitter.com/xPVZb6Ibb9
— Prakash Raj (@prakashraaj) August 24, 2021
பிரகாஷ் ராஜ் பல்வேறு திரைப்பட படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் அவரது சமீபத்திய தோள்பட்டை அறுவை சிகிச்சையில் இருந்து விரைவாக குணமடைந்து வருகிறார். அவர் சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் மணிரத்னத்தின் மகத்தான படைப்பான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பங்கேற்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.