scorecardresearch

பதான் புறக்கணிப்பு விவகாரம்; முட்டாள்களும் மதவெறியர்களும் குரைப்பார்கள்… கடிக்கமாட்டார்கள் – பிரகாஷ் ராஜ்

நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா ‘குரைப்பவர்கள்’, ‘கடிக்கமாட்டார்கள்’ – பிரகாஷ் ராஜ்

பதான் புறக்கணிப்பு விவகாரம்; முட்டாள்களும் மதவெறியர்களும் குரைப்பார்கள்… கடிக்கமாட்டார்கள் – பிரகாஷ் ராஜ்
பதானுக்கு எதிரான பிரச்சாரத்தை சாடிய பிரகாஷ் ராஜ் (புகைப்படம்: பிரகாஷ் ராஜ்/இன்ஸ்டாகிராம்)

தென்னிந்தியத் திரையுலகில் பிசியாக நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதில் பெயர் பெற்றவர். கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச கடிதத் திருவிழாவில் கலந்துக் கொண்ட பிரகாஷ் ராஜ், நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா ‘குரைப்பவர்கள்’, ‘கடிக்கமாட்டார்கள்’ என்று கூறினார்.

நிகழ்ச்சியில், பிரகாஷ் ராஜ், “அவர்கள் பதான் திரைப்படத்தை தடை செய்ய விரும்பினர். ஆனால் படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த முட்டாள்கள், மதவெறியர்கள்… பதானை தடை செய்ய நினைத்தவர்கள், மோடியின் (பி.எம் நரேந்திர மோடி) படத்தை 30 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு கூட பார்க்கவில்லை. எல்லோருக்கும் தெரிந்ததுபோல்… அவர்கள் குரைக்கிறவர்கள், கடிக்கமாட்டார்கள். ஒலி மாசுபாடு.” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: வில்லி ரோல் பண்ணலாம்… ஃபயர் பத்திக்கும்’: வனிதா விஜயகுமார் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட்

பிரகாஷ் ராஜ் பின்னர் விவேக் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை விமர்சித்தார், “காஷ்மீர் பைல்ஸ் முட்டாள்தனமான படங்களில் ஒன்றாகும், ஆனால் அதை தயாரித்தவர் யார் என்பது நமக்குத் தெரியும். வெட்கமில்லை. சர்வதேச நடுவர் மன்றம் அவர்கள் மீது துப்புகிறது. ஆனால் எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை என்று இயக்குனர் கேட்கிறார். ஒரு பாஸ்கர் கூட கிடைக்காது. அங்கே ஒரு சென்சிடிவ் மீடியா இருக்கிறது, அதனால் சொல்கிறேன். அங்கே நீங்கள் ஒரு பிரச்சார படம் செய்யலாம். எனது ஆதாரங்களின்படி. இது போன்ற படங்களைத் தயாரிக்க மட்டும் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால் மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது,” என்று பிரகாஷ் ராஜ் கூறினார்.

பதான் ரிலீஸுக்கு முன்னதாக, “பேஷாரம் ரங்” பாடலில் தீபிகா படுகோனின் காவி கலர் பிகினி காரணமாக பல தரப்பிலிருந்து படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று அழைப்பு வந்தது. இருப்பினும், திரைப்படத்திற்கு எதிரான பிரச்சாரம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தொகையை ஈட்டியதால் ஒன்றுமில்லாமல் போனது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Prakash raj on pathaan boycott campaign

Best of Express