Advertisment

"மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சி - கும்பமேளாவில் நீராடுவது போன்ற ஏ.ஐ புகைப்படம்": பிரகாஷ் ராஜ் போலீஸில் புகார்

தான் கும்பமேளாவில் நீராடுவது போன்ற ஏ.ஐ புகைப்படத்தை பரப்பிய நபர் மீது, நடிகர் பிரகாஷ் ராஜ் போலீஸில் புகாரளித்துள்ளார். குறிப்பிட்ட முகநூல் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Prakash Raj

பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் புனித நீராடுவது போன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம் பகிரப்பட்டு வருவது தொடர்பாக, நடிகர் பிரகாஷ் ராஜ் போலீஸில் புகாரளித்துள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Prakash Raj complains against activist for sharing AI-generated image of him taking dip at Mahakumbh: ‘People are creating religious divides’

 

Advertisment
Advertisement

இந்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பிரசாந்த் சம்பர்கி என்ற நபர், "பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுருந்தார். தற்போது இந்த முகநூல் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மைசூரு காவல் நிலையத்தில் பிரகாஷ் ராஜ் புகாரளித்துள்ளார். அதன் பேரில், "நான் எந்த மதத்திற்கும் எதிராக பேசியதில்லை. இவர்கள் மத பிளவுகளை உருவாக்குகிறார்கள். பிரசாந்த் சம்பர்கி யார் என்று கூட எனக்குத் தெரியாது. அவர் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எனது போலியான படத்தை உருவாக்கி தவறான தகவல்களை பரப்பியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, "இந்துக்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மகாகும்பம் ஒரு புனிதமான நிகழ்வு. ஆனால், எனது போலி புகைப்படம் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரானவன் என்று பல ஆண்டுகளாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். பிரசாந்த் சம்பர்கி நன்கு அறியப்பட்டவரா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் என்னைப் பற்றி பொய்களைப் பரப்புவது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற பிரசாரத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. இவர்கள் மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல; அவர்கள் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Prakash AI

 

முன்னதாக தன்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் தொடர்ந்த வழக்கில், அவர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. "இப்போது, ​​சம்பர்கி மீது நான் புகார் அளித்துள்ளேன். அவரிடம் விசாரணை நடத்தப்படும். உண்மையை அறிய பொதுமக்கள் தகுதியானவர்கள். போலிச் செய்திகள் சமூகத்தை அழிக்கின்றன

நம்பிக்கை என்பது தனிப்பட்ட விருப்பம். நான் கடவுளை நம்பவில்லை. ஆனால் நான் மனிதநேயத்தை நம்புகிறேன். கடவுள் இல்லாமல் வாழ முடியும். ஆனால் சக மனிதர்கள் இல்லாமல் வாழ முடியாது. நான் நம்பிக்கையை கேள்வி கேட்கவில்லை ஆனால் மூடநம்பிக்கையை எதிர்க்கிறேன். என் மனைவியும், மகளும் கோயில்களுக்குச் சென்று சடங்குகளைச் செய்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்கிறேன்" என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

Prakash Raj AI
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment