/tamil-ie/media/media_files/uploads/2023/04/js-Prakash-Raj.jpg)
பிரகாஷ் ராஜ் பிலிம்பேர் விருது வாங்கியதை அவரது மகன் மேடை அருகிலேயே கொண்டாடினார்.
2024 ஆம் ஆண்டிற்கான பிரமாண்டமான பிலிம்பேர் விருது நிகழ்வு ஹைதராபாத் ஜே.ஆர்.சி கன்வென்ஷன் சென்டரில் அனைத்து தென்னிந்திய திரைப்படங்களுக்கும் நடைபெற்றது.
தெலுங்குப் படங்களில் நானியின் தசராவுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. இந்தப் படம், நானிக்கு சிறந்த நடிகர் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகை விருது உட்பட ஆறு பிலிம்பேர் விருதுகளுடன் நிகழ்ச்சியில் ஆதிக்கம் செலுத்தியது.
That joy on my sons face .. bliss ❤️❤️❤️thank you filmfare.. thank you audience.. thank you team #Rangamarthanda#Filmfareawardspic.twitter.com/PV0DnGG2JF
— Prakash Raj (@prakashraaj) August 4, 2024
பாலகம் சிறந்த தெலுங்கு படமாகவும், பாலகம் வேணு சிறந்த இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டார். டோலிவுட் பரபரப்பான படமான பேபியும் ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு விமர்சகர் பிரிவில் சிறந்த நடிகர் (ரங்க மார்த்தாண்டா) விருது வழங்கப்பட்டது.
இந்த விருது கிடைத்ததை அவரது மகன் உற்சாகமாக கொண்டாடினார். இந்த வீடியோ காட்சியை பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ளார். இது வைரலானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.