scorecardresearch

‘இதுவரை சந்திக்காத நபருடன் காதல்’ பிரணிதா ரகசியம்

பிரணிதா தனது கணவரின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பான கிஃப்ட்டை கொடுத்துள்ளார்

கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை பிரணிதா, உதயம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் . சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். சூர்யாவுடன் மாஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கடந்தாண்டு நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதுவரை சந்திக்காத நபருடன் காதல் கொண்டுள்ளீர்களா? நான் காதல் கொண்டுள்ளேன் என பதவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு, ஒருவேளை பிரணிதா கர்ப்பமாக இருப்பதை தான் இப்படி கூறுகிறாரா ரசிகர்கள் கமெண்ட் பதிவிட வேண்டும்.

இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலே, ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் பாஸிட்டிவ் ரிசல்ட் வந்த ப்ரக்னன்ஸி கார்டு ஆகியவற்றுடன் தனது கணவர் தன்னை தூக்கி வைத்திருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

அதில், தனது கணவரின் 34வது பிறந்த நாளுக்கு மேலே உள்ள தேவதைகள் எங்களுக்கு கிஃப்ட் கொடுத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன் என பதிவிட்டிருந்தார். பிரணிதாவின் பதிவை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Pranitha announed pregnancy on husband birthday