இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள "அந்தகன்' படத்தின் விமர்சனம்
கதைக்களம்:
கதையின் நாயகன் கிரிஷ் (பிரஷாந்த்) பார்வையற்ற பியானோ ஆர்டிஸ்டாக இருந்து வருகிறார். அவருக்கு நாயகி ப்ரியா ஆனந்தின் நட்பினால் அவர் வேலை செய்யும் பாரிலேயே ஒரு வேலை கிடைக்க அதில் வரும் வருமானத்தை வைத்து லண்டன் போக முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் அறிமுகம் கிடைக்கிறது. அவரின் திறமையை பார்த்த கார்த்திக், அவரை தன்னுடைய திருமண நாளன்று தன் மனைவியான சிமியை (சிம்ரன்) சர்ப்ரைஸ் செய்ய வீட்டிற்கு வர சொல்கிறார். அனால் அங்கு வந்த பிரசாந்திற்கு கடும் அதிர்ச்சி. கார்த்திக் அங்கு இறந்து கிடக்கிறார், சிம்ரனும் அவரது கள்ளகாதலனான சமுத்திரக்கனியுடன் இணைந்து இந்த கொலையை செய்ய, இதை பிரசாந்த் பார்க்கிறார். அனால் அவருக்கு தான் கண் தெரியாதே என்று கடந்து செல்ல ஒரு கட்டத்தில், கிரிஷ்ஷுக்கு பார்வை இருப்பது சிம்ரனுக்கு தெரிய வருகிறது. இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு:
நீண்ட வருடங்களுக்கு பிறகு நாயகனாக திரையில் தோன்றியிருக்கும் நடிகர் பிரசாந்த் தன்னுடைய சார்மிங்கான நடிப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். கண்களை மூடிக்கொண்டு குருடனாக நடிப்பது சுலபம், ஆனால் கண்களைத் திறந்து கொண்டு பார்வையற்றவராக நடிப்பது மிகவும் சவாலானது, ஆனால் அதை சர்வ சாதாரணமாக செய்துள்ளார். குறிப்பாக கார்த்திக்கின் கொலை நடைபெறும் சமயத்தில் கண் தெரிந்தும் தெரியாதது போல் நடித்திருக்கும் அவரின் பெர்பாமன்ஸ் வேற லெவல். இதுவரை மென்மையான நாயகியாகவும், டூயட் பாடும் நடிகையாகவுமே நம்மை கவர்ந்த சிம்ரன் இப்படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். அவரின் ஒவ்வொரு ரியாக்ஷனும் கொடூர குணத்தின் உச்சம். மேலும் கார்த்திக், சமுத்திரக்கனி, வனிதா, யோகிபாபு, கே.எஸ் ரவிக்குமார், பிரியா ஆனந்த் என ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமும் நடிப்பில் கலக்கியுள்ளனர்
இயக்கம் மற்றும் இசை:
ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "அந்தாதூன்" படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம் என்பது நாம் அறிந்ததே. நம் ரசிகர்களை கவரும்படி திரைக்கதையில் சிறு சிறு மாற்றங்களுடன் ஒரு பக்கா தமிழ் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் தியாகராஜன். சந்தோஷ் நாராயணின் பாடல்களும், பின்னணி இசையும் சுமாராக அமைந்துள்ளது.
படத்தின் ப்ளஸ்:
⦿ கலக்கலான கதாப்பாத்திர தேர்வு
⦿ பிரசாந்தின் நடிப்பு மற்றும் சிம்ரனின் வில்லத்தனம்
⦿ யோகிபாபுவின் காமெடி
⦿ எதிர்பாராத திருப்பங்கள்
⦿ பரபரப்பான இடைவேளை
படத்தின் மைனஸ்:
⦿ சந்தோஷ் நாராயணின் இசை
மொத்தத்தில், ஹிந்தியில் ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கு ரசிக்க எதுவும் இல்லை, ஆனால் புதிதாக படம் பார்க்கும் ரசிகர்களுக்காக இப்படம் சூப்பரான திரில்லராக அமையும்
விமர்சனம்: நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“