Preethi sharma Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலில் சித்தி 2 சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ராதிகாவின் மகள் வெண்பாவாகாவும், கவின் என்பவருக்கு ஜோடியாகவும் நடிகை ப்ரீத்தி ஷர்மா நடித்து வருகிறார். வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

லக்னோவில் பிறந்த ப்ரீத்தி ஷர்மா சிறுவயதிலியே குடும்பத்துடன் கோவையில் வசித்துவருகிறார். அங்கு தனது பள்ளிப் படிப்பை முடித்த இவர் 12ம் வகுப்பு படிக்கும்போது ‘கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். அதன்பிறகு கல்லூரி படித்தபோது, பாடகராக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாராம்.

இந்த நேரத்தில்தான் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து இருக்கிறார். தவிர, போட்டோஷூட்டிலும் ஆர்வம் கொண்ட இவர், தான் விதவிதமாக எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது திருமண கோலத்தில் மிகவும் வித்தியாசமாக போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா? என ஷாக்கிங்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆனால், மாடலிங் ஷூட்டுக்காக எடுக்க பட்ட புகைப்படம் தான் இது. திருமண முகூர்த்த புடவைகளுக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தான் திருமண பெண்ணாகவே மாறியுள்ளார் ப்ரீத்தி ஷர்மா. இந்நிலையில், ப்ரீத்தி ஷர்மா மணமகள் கோலத்தில் கழுத்தில் தாலியோடு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




ப்ரீத்தி ஷர்மா சமீபத்தில் கருணாஸ் மகன் கென் நடித்த ஆல்பம் பாடலில் அவருடன் டான்ஸ் ஆடி இருந்தார். அந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“