Preethi Sharma Tamil News: தற்போது உள்ள சீரியல் நடிகைகளுள் சிலர் பல திரைப்படங்களில் நடித்து வாங்கும் பேரையும் புகழையும் ஒரு சில சீரியல்களில் பெற்று உச்சம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகை ப்ரீத்தி ஷர்மா.

இன்ஸ்டாகிராமில் கலக்கலாக ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி வரும் ப்ரீத்தி ஷர்மா பிறந்தது லக்னோவிலாம். ஆனால், சிறுவயதிலியே குடும்பத்துடன் கோவையில் செட்டிலானதால், கோயம்புத்தூரில் தான் தனது பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். இவர் 12 படிக்கும்போது ‘கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார்.
அதன்பிறகு கல்லூரி படித்தபோது, பாடகராக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாராம். இந்த நேரத்தில்தான் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்து இருக்கிறார். தவிர, போட்டோஷூட்டிலும் ஆர்வம் கொண்ட இவர், தான் விதவிதமாக எடுக்கும் போட்டோகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சன் டிவியின் சித்தி 2 சீரியலில் நடிக்கிறீர்களா என்று இவரிடம் கேட்க்கப்பட்ட போது அதை சந்தோஷமாக வரவேற்றுள்ளார் ப்ரீத்தி ஷர்மா. ஏனென்றால் நடிகை ராதிகாவுடன் நடிப்பது இவருக்கு பெரும் பாக்கியமாக நினைத்து இருக்கிறார் .மேலும், சித்தி ஒன்றுக்கு கிடைத்த வெற்றியை மனதில் நினைத்து இதில் நடிக்க உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இருப்பினும், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராதிகா திடீரென விலகி கொண்டார். அதன்பின் நடிகை ப்ரீத்தி ஷர்மா மற்றும் நந்தன் லோகநாதன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ப்ரீத்தி ஷர்மா கென் கருணாஸ் பாடி நடித்துள்ள ஒரு ஆல்பம் சாங்கில் அவருக்கு ஜோடியாக நடனமாடியுள்ளார். கென் கருணாஸ் பிரபல நடிகர் கருணாஸின் மகன் ஆவார். இவர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தில் நடிகர் தனுஷின் மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil