வடிவேலு பிறவிக் கலைஞன், அவர் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என அவர் படங்கள் நடிக்காதப்போது, அவருக்காக தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புக் கேட்டவர் விஜயகாந்த் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், அந்த நிகழ்வுகளுக்கு பிறகு, விஜயகாந்திடம் வந்து வடிவேலு மன்னிப்புக் கேட்டார் என்று கூறப்படும் தகவல் தவறானது. தன்னை திட்டியவர்களை, தவறாக பேசியவர்களைப் பற்றி விஜயகாந்த் எங்கும் எப்போதும் குறைக் கூறியது கிடையாது. சமூக ஊடகங்களில் அவரைப் பற்றி எத்தனையோ மீம்ஸ்கள் வந்தாலும், விஜயகாந்த் அதைப் பற்றி கவலைப்பட்டதில்லை.
இதையும் படியுங்கள்: விஜயகாந்த் செய்த நன்மைகள் ஏராளம்; சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்படுவது வருத்தம்
வடிவேலு அவ்வளவு பேசியப் பிறகும், அவருக்காக பரிதாபப்பட்டவர் விஜயகாந்த். வடிவேலு படங்கள் நடிக்காமல் இருந்தப்போது, அவர் ஏன் இப்ப நடிக்கிறது இல்ல, வடிவேலு பிறவிக் கலைஞன், அவர் நடித்துக்கிட்டே இருக்கணும், எல்லா தயாரிப்பாளர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கணும் என்று கூறியவர் விஜயகாந்த். அவருக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் எல்லோரிடம் வடிவேலுக்காக ரெக்கமெண்ட் செய்தவர் விஜயகாந்த்.
பெரும்பாலும் அனைவரும் தன்னை திட்டியவர்களை பழிவாங்கவே நினைப்பார்கள். ஆனால் விஜயகாந்த் அவர்களுக்கும் வாழ்க்கை வேண்டும் என நினைப்பவர். விஜயகாந்த் எப்போதும், வடிவேலு பற்றியோ அல்லது அவருக்கு துரோகம் இழைத்த எம்.எல்.ஏ.,க்கள் பற்றியோ தவறாக பேசியதே இல்லை.
விஜயகாந்த் முதல்வராகும் நல்ல வாய்ப்பை தவறவிட்டது தமிழக மக்கள் தான். 40 வருடம் மக்களுக்காக உழைத்தவர் விஜயகாந்த். சிவாஜி இறந்தப்போது முன் நின்று வேலை செய்தவர், நடிகர் சங்க கடனை அடைத்தவர் விஜயகாந்த். கலைஞர் – ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இருந்தப்போதும், அரசியலுக்கு வந்தவர். ஒருமுறை முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்காதவர் விஜயகாந்த். மக்களுக்காக உழைக்க வேண்டும் என நினைத்தவரை முதல்வராக்காமல் விட்டது தமிழக மக்கள் தான். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.