2016-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுபாமா பரமேஷ்வரன்.

அதன்பிறகு 5 வருடங்களுக்கு பிறகு தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்த அனுபாமா தற்போது சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர்,அதன்பிறகு அ ஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

இவர் தொடர்ந்து ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்திருந்தார். இடைப்பட் ஆண்டுகளில் தெலுங்கு மலையாளம் என்று நடித்து வரும் அனுபாமா, கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான கார்த்திகேயா 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சைரன், ஜேஎஸ்கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனுபாமா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“