பிரேம்ஜி கல்யாணம் களைகட்டுது; நிச்சயதார்த்த விழாவில் பாடல் பாடி அசத்திய மணமக்கள்

நிச்சயதார்த்த விழாவில் பிரேம்ஜி- இந்து தம்பதி பாடல் பாடி அசத்தினர். சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

நிச்சயதார்த்த விழாவில் பிரேம்ஜி- இந்து தம்பதி பாடல் பாடி அசத்தினர். சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Premji sings.jpg
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பிரேம்ஜி- இந்துவின் திருமணம் இன்று (ஜுன் 9) திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறுகிறது. பிரபல  இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன்  பிரேம்ஜி. இவர் நடிகர், இசையமைப்பாளர் ஆவர்.   சென்னை 28, மங்காத்தா,  கோவா,  மாஸ்,  சேட்டை உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார். வெங்கட் பிரபு – அஷோக் செல்வன் கூட்டணியில் வெளியான மன்மத லீலை படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார்.

Advertisment

இவருக்கும் இவரது நீண்ட நாள் தோழியான இந்து என்பவருக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று நேற்று மாலை திருத்தணியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரேம்ஜி-இந்துவின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. 

premji sing.webp

இந்த விழாவில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். திரைப்பட நடிகர்களில் சிலரும் விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில்,  பிரேம்ஜி- இந்து  இருவரும் இணைந்து மேடையில்  திரைப்பட பாடல் பாடி அசத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் கைதட்டி, விசில் அடித்து உற்காசப்படுத்தினர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisements

    Premji

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: